Categories
நினைவுகள்

இனிக்கும் நினைவுகள்!

பள்ளி ஆண்டு விழா! பெற்றோர், பெரியோர், தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் ஒருங்கிணைந்த நீங்கா நல்ல நினைவுகளைத் தரும் நிகழ்வு பள்ளியின் ஆண்டு விழா. இதன் உணர்வு எனக்கு 1992 துவங்கி இப்போது வரை பயணிக்கிறது. ஆமாம். 1992 ல் எனது பள்ளியின் ஆண்டு விழா!இந்த ஆண்டு எனது மருமகளின் பள்ளி ஆண்டு விழா. 1992 லும், இப்போதும் எனக்குக் கிடைத்த உணர்வு என்பது ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட […]

Categories
தற்கால நிகழ்வுகள்

தலைதூக்குமா தவெக?

தமிழக வெற்றிக் கழகம். கிட்டத்தட்ட அறுபது ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சியில் மாறி மாறி அமர்ந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு பெரிய சக்தி உருவெடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி ஈழப்போரின் முடிவில் பெரிதாகக் உருவெடுக்கத் துவங்கியது. ஆனால்அந்தகக்கட்சி அதன்பிறகு பல குழப்பங்களைச் செய்து, கொள்கை ரீதியாகக் குழப்பமில்லாமல் மக்களைச் சென்றடைந்து அவர்களின் மனதை வெல்வதில் சோடையாகத்தான் உள்ளனர். திராவிடக் கொள்கைகள் தமிழகத்தில் கோலோச்சி மக்களின் மனதையும் வென்று விட்டதால், மாற்றுக் கொள்கைகள் கொண்ட பாஜக, காங்கிரஸ் […]

Categories
கருத்து நினைவுகள்

பகிர்தலின் மகிழ்ச்சி

வாழ்க்கை என்பது எங்கோ தூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தால் நாம் இழந்த போன வார இறுதியிலும் அடுத்த வார இறுதியிலும் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது. நண்பர்களுடன் சிறிது நேர உரையாடல். பழைய விஷயங்கள். டேய் நம்ம 4 வது பிடிக்கிறப்ப இருந்தாலே மைதிலி. இப்ப அவ புள்ள 4 வது படிக்குது டா. நம்ம பாரு இன்னும் உட்கார்ந்து அவள யோசிச்சுட்டு இருக்கோம் என்பதில் ஆரம்பித்து, மாப்ள headmaster நம்மள அடிப் பிரிச்சாரு ஞாபகம் இருக்கா? […]

Categories
தற்கால நிகழ்வுகள்

அரசுப்பேருந்து ஓட்டுநரின் அகங்காரம்

நமது பக்கத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்பு எழுதியிருந்தோம், அரசு அதிகாரிகளுக்குக் கடிவாளம் அவசியம் என்று. அரசு அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணமாக அரசுப் பணி செய்யும் அனைவருக்கும் அந்தக் கடிவாளம் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு நான் சந்தித்த மோசமான பேருந்து பயணத்தைப் பற்றியும், அது சம்பந்தமாக முதல்வர் பிரிவில் நான் அளித்த புகார் பற்றியும் எழுதியிருந்தேன். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து சரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. “தெரியாம செஞ்சுட்டாங்க சார், நான் கண்டிச்சிருதேன்” என்று எளிதாக […]

Categories
கருத்து குட்டி கதை பாடல்

வாழ நினைத்தால் வாழலாம்..

மனிதன் வாழ்க்கை சிறப்பாகும் எப்போது? துயரத்தில் தோள் கொடுக்கவும், சந்தோசத்தை தூக்கி நிறுத்தவும், நல்லது செய்யும் போது பாராட்டவும், பாதை தவறும் போது அதட்டவும் ஆள் இருக்கும் போது. அப்படி எல்லாமாக. இருந்த ஒருவரை இழக்கும் போது வாழ்க்கையே முடிந்த எண்ணம் வரும். ஆனால் அத்துடன் வாழ்க்கை முடிவதில்லை. எங்கிருந்தோ ஏதோ ஒரு வகையில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்கும். தேடிப் பிடிக்கத் தெம்பிருந்தால் போதும். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? ஆழக்கடலும் சோலையாகும் ஆசை […]

Categories
கருத்து

பொறுப்பு வேண்டாமா? பிரபலங்களே!

சமீபத்தில் தினசரி ஒன்றில் ஒரு தலையங்கம் கண்டு வியந்தேன். ஆந்திர மாநிலத்தில் பொறுப்பில்லாமல் விளம்பரங்களில் நடித்து மக்களிடையே தரமில்லாத பொருட்களை சேர்த்ததற்காக சில பிரபலங்களின் மீது வழக்குகள் பதியப்பட்டதாக ஒரு செய்தி. இது போல பொறுப்பில்லாத பிரபலங்களை வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்பது தான் நமது வாதமும். முதலில் குழந்தைகளின் உணவுப் பதார்த்தங்களில் துவங்கும் இந்த விஷயம், வாழ்வின் இறுதி வரை நாம் உபயோகிக்கும் அத்தனை பொருட்களையும் நம் விருப்பமில்லாமல் நமது தலையில் கட்டுகிறது. […]

Categories
தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

பழைய கசப்பான ரயில் பயண அனுபவம்.

வாழ்வில் சில நேரங்களில் நாம் யோசிக்காமல், ஆராயாமல் செய்யும் சில காரியத்தால் மறக்க முடியாத கசப்பான அனுபவங்களைப் பாடமாகப் பெறுவோம். அப்படி ஒரு சம்பவம். 1 June 2022 ல் நடந்தது. இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. சென்னையிலிருந்து கோவைக்கு செல்வதற்காக, கோவைக்கு நன்கு விடிந்து தாமதமாகப் போனால் போதுமென்று சென்னையில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் ரயிலில் இரண்டாம் படுக்கை வசதி இருக்கை ஒன்றை முன்பதிவு செய்துவிட்டேன். திங்கட்கிழமை IRCTC குறுந்தகவலைக் கண்டு அதிர்ந்தேன். “Chart […]

Categories
விளையாட்டு

ஈசாலா கப் நம்தா?

தொடங்கிவிட்டது இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் திருவிழா. இனி நாள்தோறும் ஒரு மாதத்திற்கு மாலை வேளை, வீடுகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பு அலைவரிசை மாற்றுதல் தொடர்பான சண்டைகள் நிகழும். முன்புபோல இல்லை, இப்போதெல்லாம் ஆளாளுக்கு ஒரு மொபைல்போன் வைத்துக்கொண்டு அதிலேயே அவரவர் விருப்பத்திற்கு பார்த்துக் கொள்கிறார்கள். ஐபிஎல் ன் அனைவரின் செல்லப் பிள்ளைகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் வெற்றியைப் பதித்துப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கண்ணன் தேவன் டீ குடி, சி எஸ் கே புடி புடி […]

Categories
இலக்கியம் கருத்து தற்கால நிகழ்வுகள்

கேடு காலத்தில் (கேடுகெட்ட) நண்பர்கள் – திருக்குறள் விளக்கம்

இனிய துவக்கம், முதல் வார்த்தை நல்ல வார்த்தையாக அமைய வேண்டுமென்பதற்கான இணைப்பு வாக்கியம் தான் அந்த இனிய துவக்கம். கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்திருக்கு என்று சில நேரம் நாம் ஏதாவது ஒரு பாதிப்பைச் சந்திக்கும் போது சொல்வதுண்டு. கெட்டதுல என்ன பெரிய நல்லது நடந்துடப் போகுது? நம்ம உறவுக்காரங்கள்ல யாராவது ஒருவர் தவறும்பட்சத்தில், நீண்ட நாள் பேசாமலிருந்த மற்றொரு உறவுக்காரர் வந்து பழக நேரிடலாம். இது மாதிரியான அனுபவங்கள் இங்கு பலருக்கும் இருக்க வாய்ப்புள்ளது. இதே […]

Categories
அறிவியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

நம்பிக்கை ஒன்றே போதுமே!

விடியும் என்று நம்பித்தான் நிம்மதியாக உறங்குகிறோம். அதைப்போலவே முடியும் என்று நம்பி படபடப்பு இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்தால் நிச்சயமாக முடியும். ஒருவேளை அது முடியலாம், அல்லது அந்த முயற்சி வெற்றியைத் தராமலும் போகலாம் ஆனால் முயன்றது தோல்வி அல்ல. முயற்சி என்பதே வெற்றி தான் என்பதை உணர்ந்தி கொண்டால் இந்த உலகை வென்று விடலாம். உலகை வென்று விடலாம் என்றால், மாவீரன் நெப்போலியன் போல படைகொண்டு உலகைக் கட்டி ஆள்வதல்ல. ஒரு முயற்சியில் நாம் தோல்வியுறும் […]