சாமானியர்களை மிரட்டுகின்றன விமான நிலைய சோதனைகளும், விதிமுறைகளும். ஆமாம். நான் முதல்முறையாக விமானத்தில் பயணிக்கக் கிளம்பிய போது யாதார்த்தமாக எனது பையை அங்கே கீழே வைத்து விட்டு, சிறிது நகர்ந்து என் குடும்ப்க் கூட்டத்தை ஒருங்கிணைக்கலாம் என்று நகர்ந்த போது அங்கிருந்து பாதுகாவலர்கள் லப லப என்று கத்தியது, ஒரு மாதிரி மனதில் பாரத்தை தான் ஏற்படுத்தியது. ஆனால் அது அவர்களது பணி, விதிமுறை என்பதை நான் அறியாமல் இல்லை. பிறகு பல வருடம் கழித்து விமானம் […]
Month: February 2025
குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் , ஆனால் கோவில்பட்டியில் குடிநீருக்கே திண்டாட்டம் என்று முன்னாளில் ஒரு கேலி சொலவடை எங்கள் ஊரில் உண்டு. அதாவது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இருந்த போது இந்த சொல்வடை சொல்லப்படுவது உண்டு. இது எதற்காக சொல்லப்பட்டது என்றெல்லாம் ஆராயத் தேவையில்லை. சும்மா ஒரு கோர்வையான வார்த்தைக்காக சொல்லப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது கோர்வைக்காக அல்லாமல் உண்மையாகவே சொல்லப்படலாமோ என்று தோன்றுகிறது. ஆம், இந்து முன்னனி, இந்து ஆதரவு, இந்து முன்னேற்றம், […]
யாரு படம் ஓடினாலும், ஹீரோ நாங்கதான்

தமிழ் சினிமாவில் எப்போதுமே இருபெரும் நடிகர்கள் மிகப்பிரபலமாகக் கோலோச்சுவார்கள். அவர்களின் ரசிகர்களுக்கிடையிலும் வாய்ச் சண்டையில் துவங்கி கைகலப்பு வரையெல்லாம் நிகழும். அப்படி முந்தைய கருப்பு வெள்ளை காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறையில்ரஜினி- கமல். அவர்களைத் தொடர்ந்து அவர்கள் இடத்தில் தற்போது கோலோச்சும் இரு துருவங்கள் விஜய்- அஜித். முந்தையவர்கள் காலத்தை விட இவர்கள் காலத்தில் இணைய வளர்ச்சி காரணமாக இவர்களது ரசிகர்களுக்கிடையே வாய்க்காதகராறு சிறிதே அதிகம் தான். இவர்கள் படம் நேரடியாக மோதிக்கொண்டாலும் […]
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை – சோதனைகள்

டிஜிட்டல் பண பரிவர்த்தனை உபயோகத்தினால் நமக்கு நல்லது நடக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக பாதிப்புகள் உள்ளன என்று ஆங்காங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது பணத்தை நாம் கையில் எடுத்து அதை உறவாடி செலவு செய்யும் போது இருக்கும் கவனமும், திருப்தியும், டிஜிட்டல் வழியில் செலவு செய்தால் கிடைப்பதில்லை. மேலும் பணம் நம்மிடம் இருந்து வெளியே போவதை உணராமல் செலவு செய்யும் காரணத்தால், பணத்தை சேமிக்கும் எண்ணமும் குறைந்து வருவதாகவும் பேச்சு உள்ளது. இதில் சேமிப்பு குணம் என்பது வங்கியில் […]
தூங்கவிடா நியாபகங்கள்.

எப்போதும் நமது சொந்த அனுபவம் பிறர் அனுபவத்தோடு ஒத்துப் போகும்.அதுவும் சிறுவயதில் நாம் நமது சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு விடுமுறைக்குப் பயணிப்பது அலாதியான அனுபவம். சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்திலும் கூட அந்த உணர்வு மெலிதாகக் கடத்தப்பட்டிருக்கும். அப்படியான என்னுடைய அனுபவம், எனது அம்மா வழி தாத்தா பாட்டி ஊர் மற்றும் வீடு , மற்றும் எனது அத்தை மாமா ஊர் மற்றும் வீடு. இரண்டும் வேறு வேறு விதமான அனுபவங்கள். முதலில் எனது அத்தை மாமா […]

இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவிய அதே நாளில் தான் இன்னொரு துக்க செய்தியைக் கேட்டறிந்தோம். மஹா கும்பமேளாவில் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்காகத் திரண்ட காரணத்தால் 30 பக்தர்கள் மரணம், அதிகமானோர் காயம். இந்தப்பக்கம் நமது மாநிலத்தின் ஆளுநர் சனாதான தர்மத்தைப் பாதுகாப்போம் வளர்ப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். இப்படி சனாதான தர்மத்தைக் காப்போம் என்று பேட்டி அளிக்கும் எந்த மிகப்பெரிய ஆளுமையும் அந்த கும்ப மேளா கூட்டத்தில் […]