Categories
சினிமா தமிழ்

புஷ்பா – 2- ஒரு அலசல்

சென்ற வாரம் வெளியான புஷ்பா படத்தின் பகுதி இரண்டு பற்றிய ஒரு அலசல். புஷ்பா ஃபயரா, ப்ளவரா? ஃபயர் தான். ஆனால் அதிக நேரம் எரிந்து மூச்சுத்திணறல் வரும் அளவுக்குப் புகை கக்கிய ஃபயர் என்பது ஒரு ஏமாற்றம். படத்தின் ஒரு குறிப்பிடத்தகுந்த குறை என்பது படத்தின் நீளம். இது பெரிய குறை ஆனாலும், படத்தை பாதாளத்தில் தள்ளும் குறை அல்ல. க்ளைமாக்ஸ் காட்சி தவிர மற்ற எந்தக் காட்சிகளிலுமே, இந்தக் காட்சி எப்போது முடியும் என்ற […]

Categories
கருத்து தமிழ்

சிசேரியன் எனும் அறுவை அரக்கன்

சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பெறுவதில் தென் மாநிலங்களான, தெலுங்கானா, தமிழகம் மற்றும் ஆந்திரா முதலிடம். முன்பெல்லாம் பிரசவம் என்றால் ஒரு நாலு பெண்கள் வீடுகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணை சுற்றி மறைத்து, சுடுதண்ணீர் எடுத்து, ஏதோ செய்வார்கள், குழந்தை பிறக்கும், தொப்புள் கொடி அறுக்கப்பட்டு , குழந்தையை சுத்தம் செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்று விடுவார்கள். காலப்போக்கில் மருத்துவ வசதிகள் அதிகரித்த பிறகு, பிரசவம் என்பது வீடுகளில் செய்யப்படும் விஷயமல்ல.அதில் […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

பக்தி என்பது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார் குறள் 10 இறைவனின் திருவடிகளை அடைந்தவரால் மட்டுமே இந்தப்பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க இயலும் என்பது வள்ளுவர் வாக்கு. இறைவனின் திருவடியை அடைவது எப்படி? கள்ளம்கபடமில்லா பக்தியும், சக உயிர்களுக்கு நாம் செய்யும் உதவியும், நாம் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை நெறியும் தான் நம்மை அந்த இறைவனின் திருவடியில் சேர்க்கிறது. ஒரு விஷயத்தை நாம் அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பக்தி என்பது என்ன என்பதை […]

Categories
குட்டி கதை தமிழ்

பட்டினத்தாரின் அனுபவம்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். கோவணத்துடன் கிளம்பினார். கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து. ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார். வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

ஒரு உப்புக்கல்லுக்குப் பெறாத ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல்.

ஒரு நல்ல தலைவன் என்பவன் கஷ்டம் என்று வரும்போது மக்களோடு துணை நிற்பவனே! அதாவது துணை நிற்பது என்பது வெறும் நிவாரணத்தொகை வழங்குவது, இலவச அரிசி பருப்பு, மளிகை சாமான் என்று கேவலமான நிலைக்குச் சென்று விட்டது. ஒரு கப்பல் மூழ்குகிறது என்றால் அதில் இருக்கும், ஊழியர்கள், பயணிகள் என்று முடிந்த வரை பெரும்பாலான ஆட்களைக் காப்பாற்றி விட்டு, கப்பலோடு கப்பலாக மூழ்கிப் போவதோ, அல்லது கடைசி ஆளாக தப்பித்து உயிர்பிழைப்பதோ என்று செய்பவர்தான் கப்பலின் உண்மையான […]

Categories
அறிவியல் தமிழ் தற்கால நிகழ்வுகள்

சுருங்கி வரும் குழந்தை பிறப்பு விகிதம்.

குழந்தை பிறப்பு விகிதம். இது கணக்கிடப்படும் முறை என்பது ஒரு பெண்ணுக்கு சராசரியாக எத்தனை குழந்தைகள் பிறக்கிறது என்பதை வைத்து. அந்த விகிதமானது தற்போது குறைந்து உள்ளது என்றும், இது விசித்திரமான சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும், சமீபத்திய வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அந்த ஆய்வின் சாராம்சம் என்னவென்றால், 1950 ஆம் ஆண்டில், ஒரு பெண்ணுக்கு சராசரியாக குழந்தை என்பது 4.7 என்ற எண்ணிக்கையில் இருந்திருக்கிறது. அந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

கலவரத் திருவிழா

கலவரமான கோவை உணவுத் திருவிழா! கோவையில் சென்ற வார இறுதி நாட்களில் கொடிசியா வளாகத்தில் உணவுத்திருவிழா என்ற விளம்பரம் மிகவும் பிரபலமாக இணையத்தில் பரவி இருந்தது. கிட்டதட்ட 499 உணவு வகைகளை வெறும் 799 ரூ கொடுத்தால் உண்டு மகிழலாம் என்றும், அது போக, பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இருக்கும் என்றும் மிகப் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. நாமும் கூட அந்த விளம்பரத்தைக் கண்டிருக்கக் கூடும். வெறும் 800 ரூபாயில் 499 உணவு வகைகளை உண்டு மகிழப்போகிறோம் […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

அலட்சியத்தின் விளைவு

அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவதுஅஞ்சல் அறிவார் தொழில் பயப்பட வேண்டிய சில விஷயங்களுக்கு பயப்படாமல் அலட்சியம் காட்டுவது, மூடத்தனம். அந்த அலட்சியத்தின் விளைவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்தனை அறிவியல் முன்னேற்றம் அடைந்த காலத்திலும், ரயில்வே க்ராஸிங் அதாவது தண்டாவளத்தைக் கடக்கும் போது ரயிலில் அடிபட்டு மனிதர்கள் இறந்து போகிறார்கள் என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று. அத்தனை துல்லியமான தகவல் வந்து, நேரத்திற்கு கதவுகள் முடப்பட்ட பிறகும், ரயில் வர தாமதமாகும் சிறிது நேரத்தில் […]