Categories
தகவல் வரலாறு

இந்தியாவின் மிக நீளமான தொடர்வண்டிப் பயணமும் அதன் வரலாறும்

விவேக் விரைவு வண்டி. விவேக் எக்ஸ்பிரஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொடர்வண்டிகள்.

தொடர் வண்டிகள் என்று குறிப்பிடவும் காரணம் உள்ளது. நமக்குப் பரீட்சையமான, பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் , வைகை எக்ஸ்பிரஸ், ரிக்போர்ட் எக்ஸ்பிரஸ் போன்ற பெயர்கள் ஒரு குறிப்பிட்ட தொடர்வண்டியை மட்டுமே குறிக்கும்.
அந்தப்பெயரில் அந்த ஒரு வண்டியைத்தான் பார்த்திருப்போம்.

ஆனால் இந்த விவேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கிட்டதட்ட 4 தொடர்வண்டிகள் உள்ளன.

அதாவது நான்கு வேறு வேறு வழித்தடங்களில் பயணிக்கும் வேறு வேறு வண்டிகள்.

ஏன் இப்படி நான்கு வேறு வேறு வழித்தட ரயில்களுக்கு இந்தப்பெயர் வைக்கப்பட வேண்டும்?
வேறு பெயர்களே இல்லையா? என்ற கேள்வி வரலாம்.

சரி. அது ஏனென்றால், விவேக் எக்ஸ்பிரஸ் என்ற இந்தப்பெயர் விவேகானந்தரின் 150 வது பிறந்தநாள் வருடக் கொண்டாட்டத்தின் வெளிப்பாடாகவும், அவரை கௌரவிக்கும் நோக்கத்தோடும் 2003 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்தப் பெயரில் 4 வழித்தடங்களில் இப்போது தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன.

அவை

  1. திப்ருகார்க்- கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ்
  2. ஓகா- தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ்
  3. பாந்த்ரா- ஜம்மு தாவி விவேக் எக்ஸ்பிரஸ்
  4. சந்த்ராகாச்சி- மங்களூர் சென்ட்ரல் விவேக் எக்ஸ்பிரஸ்.

இதில் முதல் வழித்தடத்தில் குறிப்பிடப்பட விவேக் எக்ஸ்பிரஸ் மிகச்சிறப்பானது. என்னவென்றால் இந்தியாவின் இருப்புப்பாதைகளில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் முதல் தொடர்வண்டி இது தான்.

15905/15906 என்ற எண்களை உடைய இந்தத் தொடர்வண்டி 4189 கிமீ தொலைவைப் பயணிக்கிறது. இந்தப்பயணமானது 74 மணி நேரம் 35 நிமிடம், அதாவது 3 நாட்களும், 2 மணி நேரமும், 35 நிமிடங்களும் நிகழ்கிறது. இந்தத் தொடர்வண்டி தனது வழித்தடத்தில் 57 நிறுத்தங்களில் நின்று செல்கிறது.

இந்தத் தொடர்வண்டியானது அசாம் மாநிலத்திலிருந்த திப்ருகார்க்ல் புறப்பட்டு, அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திர, கேரளாவைக் கடந்து, தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரிக்கு வந்தடைகிறது.

இந்த வண்டியின் எண் தற்போது 22503/22504 என்று மாற்றப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இது திப்ருகார்க்ல் இரவு 7.55 மணிக்குப் புறப்பட்டு , நான்காவது நாள் இரவு, 9.55 மணிக்கு கன்னியாகுமரியை வந்தடையும். மறுமார்க்கத்தில் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் கிளம்பி, நான்காவது நாள் 8.50 மணிக்கு அசாமை அடையும்.

வழித்தட வரைபடம்

அடுத்தது ஓகா- தூத்துக்குடி வண்டியானது 19567/19568 என்ற எண்களில் அறியப்படுகிறது.

இதன் பயண நேரம், 54 மணி நேரமும், 25 நிமிடமும். இந்தத் தொடர்வண்டி தூத்துக்குடி மற்றும் குஜராத் மாநிலத்திலுள்ள ஓகா இடையே ஓடுகிறது. தூரம் 2711 கிமீ.

வழித்தட வரைபடம்

19207/19208 என்ற எண் கொண்ட மும்பை பாந்த்ரா முனையத்தில் கிளம்பி, ஜம்மு காஷ்மீரின் தவி என்ற இலக்கை அடைகிறது.

தூரம்: 1881 கிமீ.
பயண நேரம்: 37 மணி 10 நிமிடம்

வழித்தட வரைபடம்

22851/22852 என்ற எண்கள் கொண்ட தொடர்வண்டி, கல்காத்தாவின் ஹவுராவில் கிளம்பி, கர்நாடகத்திம் மங்களூரை வந்தடைகிறது.

தூரம்: 2487 கிமீ. பயணநேரம்: 41 மணி 55 நிமிடம்

வழித்தட வரைபடம்

இணையத்தில் சேகரித்த தகவல்கள். வண்டி எண்களின் மாறுதல் போல ஏதாவது மாற்றங்களின்  தகவல்கள் மேம்படுத்தப்படாமல் விடப்பட்டதால் தகவலில் சிறு முரண்கள் இருக்கலாம்.

ஏதாவது அப்படி அறியப்பட்டால் பதிவிடவும். நாங்களும் தொடர்ந்து மேம்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

ஆனால் பொது அறிவு என்ற ரீதியில் இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

அன்புடன் நினைவுகள்.

தொடர்ந்து வாசிக்க, சென்னையின் கம்பீரமான மாடி பஸ் நினைவுகள்