தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்ற வாசகங்களைப் பல இடங்களில் கடந்து வந்திருக்கிறோம்.
ஒரு ஆத்திரத்தில் தன்னிலையறியாமல் செய்த குற்றங்களுக்கு வேண்டுமானால் பரிசீலித்து குற்றவாளி மனம் திருந்தும்படியாக தக்க தண்டனை கொடுக்கப்படலாம்.
ஆனால் திட்டமிட்டு செய்யப்படும் படுகொலைகளை அலசி ஆராய்ந்து கருணை காட்டுவது என்பது நியாயமாகாது.
கண்டிப்பான முறையில் எதிர்காலத்தில் இன்னொருவர் அது மாதிரியான தவறை தவறிக் கூடச் செய்யத்துணிந்து விடக் கூடாது. அந்தளவிற்கு கடுமையான தண்டனை அதாவது, உட்சபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனது எதிர்கால வாழ்வை நோக்கி கனவுகளோடு பயணித்துக் கொண்டிருந்து ஒரு மாணவி மற்றும் அவளது ஒட்டுமொத்த குடும்பத்தின் ஆசை, கனவு, லட்சியம், மகிழ்ச்சி, நிம்மதி எல்லாவற்றையும் ஒரே அடியாக சிதைக்கும் விதமாக அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்த இளைஞர் சதீஷ் என்பவர் அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்தார்.
அதற்கான வழக்கு இரண்டு ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு கடந்த 27 ஆம் தேதி, இவர் தான் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று அவனுக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதைப் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வெகுவாகப் பாராட்டிப் பரப்பியும் வருகின்றனர்.
அடுப்பறையிலேயே கிடந்த பெண்கள் சிறிது காலமகாத்தான், கல்வி, வேலை என்று வெளியே வரத் துவங்கியுள்ளார்கள். இது போன்ற சம்பவங்கள் அவர்களைத் திரும்பவும் அடுப்பறைக்குள்ளேயே அடக்கி வைக்க வழிவகுத்து விடும்.
அதனால் இது போன்ற வேண்டாத சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும்.
நீதியை நிலைநாட்டிய நீதித்துறை, காவல்துறை, அரசாங்கம் மற்றும் மற்ற அனைத்துத் துறைகளுக்கும், ஊடகங்களுக்கு நினைவுகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.