Categories
தமிழ் நினைவுகள்

சொர்க்கமே என்றாலும்…

சொர்க்கமே என்றாலும்… இதுக்கப்புறம் யாருக்கும் விளக்கத் தேவையில்லை. என்னைப் போலவே இதை வாசிப்பவர்களுடைய எண்ணமும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று இந்நேரம் வீட்டின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கும். பாவம் அந்த வீடு தான் நம்மை விட்டுப் பிரிந்து ஏங்கிக் கிடப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும். ஆனால் அந்த வீட்டிற்குத் தெரியாது, அதை விட்டுப் பிரிந்த காரணத்தால் நாம் ஒவ்வொரு நாளும் எப்படியெல்லாம் வாடுகிறோம், தேடுகிறோம் என்று. பிழைப்புக்காக வந்த ஊரில் கால் கடுக்கவோ, அல்லது மூளையைப் பிழியும் அளவிற்கோ […]

Categories
ஆன்மீகம் கருத்து தமிழ்

கோவில் யானையின் கோவம் – யார் தவறு?

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி, பாகன்கள் இருவர் பலியான சம்பவம் பரவலாகப் பேசப்படுகிறது. இது சம்பந்தமாக வலைதளத்தில் சில கருத்துகள் பரவி வருகிறது. அதாவது மிருக குணம் கொண்ட காட்டு மிருகமான யானை வளர்க்கத் தகுந்ததல்ல.அதை அதன் போக்கில் விடுவதே சரி. இப்படி கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து வேடிக்கை காட்டி, சம்பாதிப்பது தவறு என்ற ரீதியில் பலரும் பேசி வருகின்றனர். இந்த விஷயத்தில் நாமும் அதே பக்கத்தில் தான் நிற்கிறோம். பல நேரங்களில் பக்தி என்பது […]

Categories
சினிமா தமிழ்

கங்குவா – விமர்சனம்

கங்குவா! காரசாரமாக இணையதளத்தில் கழுவி ஊற்றிக் கொண்டிருப்பது, ஒரு புறம். சினிமா நல்லாதான் இருக்கு, இது அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சியில் ஏற்படுத்தப்படும் திட்டமிடப்பட்ட வதந்தி என்று முட்டுகள் ஒரு புறம் என கங்குவா பரபரப்பாகப் பேசப்படுகிறது. இது பிஜேபியின் சதி என்றும் சிலர் பேசுகிறார்கள். இத்தனைக்கும் நடுவில் எனது எதிர்பார்ப்புகளைத் தரை மட்டத்தில் வைத்துக் கொண்டு படத்தைப் பார்த்தேன். அப்படியிருந்தும் படம் சுமாராகத்தான் இருந்தது. படம் ஆரம்பித்து ஒரு 25 நிமிடம் செம கடுப்பு என்ற ரீதியில் […]

Categories
விளையாட்டு

பார்டர் – கவாஸ்கர் கோப்பைத் தொடர் நினைவுகள் 

கிரிக்கெட் விளையாட்டின் தலைசிறந்த போட்டிகளில் ஒன்றாக பார்டர் கவாஸ்கர் தொடரை சொல்லலாம். குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் உலக கோப்பைக்கு நிகரான மதிப்பு இதற்கு உண்டு. இது ஏன் என்று பெரிய விளக்கம் தேவை இல்லை. கடந்த 30 ஆண்டு காலத்தில் உலக கிரிக்கெட்டின் தலை சிறந்த அணி ஆஸ்திரேலியா. அவர்களை அவர்கள் நாட்டில் வீழ்த்துவது இந்தியாவை இந்தியாவில் வீழ்த்தத்துவது போல பிரம்மப் பிரயத்தனம்.  கிட்டத்தட்ட 70 ஆண்டு காலம், பல இந்திய அணிகளின் முயற்சிக்குப் பிறகு 2018இல் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நடத்தைமீறல்.

நான் எனது தாயார் மற்றும் உறவினரோடு, சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோவில்பட்டிக்கு TN 67 N 1189 என்ற பதிவு எண் கொண்ட பேருந்தில் 16 நவம்பர், மாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, 5.45 மணிக்கு வந்தடைந்தவாறு பயணித்தேன். சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் நாங்கள் நிற்கும் போதே நல்ல மழை. சரியாக 4.15 மணிக்கு நாங்கள் அந்த பேருந்து நடத்துனரிடம் பேருந்து எப்போது கிளம்பும் என கேட்டதற்கு 5 மணி ஆகும் என ஆட்களைப் புறக்கணிக்கும் […]

Categories
ஆன்மீகம் தமிழ் தற்கால நிகழ்வுகள்

பக்தியா அல்லது பரவசப் போட்டியா?

சமீபத்திய செய்தி: திருச்செந்தூர் பகுதியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் காரணத்தால் பௌர்ணமி அன்று இரவு கடற்கரையில் யாரும் தங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல். இந்தச் செய்தியின் பின்புலம் என்னவென்றால், மாதந்தோறும் திருச்செந்தூரில் பௌர்ணமி இரவில் தங்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த எண்ணிக்கை கிட்டதட்ட லட்சத்தைத் தொடுகிறது. இப்படி கடற்கரையில் லட்சம் மக்கள் படுத்து உருளுவதால், காவல்துறைக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுகிறது, சுகாதார சீர்கேடு உருவாக வழிபிறக்கிறது, சுற்றுச்சூழல் மாசடைய வழிவகுக்கிறது என்பதெல்லாம் மறுக்க […]

Categories
கருத்து தமிழ் தற்கால நிகழ்வுகள்

மக்களின் வரிப்பணம் விரயம்.

இடைத்தேர்தல் மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது இந்த இடைத்தேர்தல்.சமீபத்தில் கூட திரு.ராகுல் காந்தி அவர்கள் தனது வயநாடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் அங்கே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நிகழ்ந்தது. இது ராகுல் காந்தி அவர்களின் கதை மட்டுமல்ல. எல்லா கட்சிகளின் தலைவர்களும் இதை செய்வது வழக்கம் தான். இந்த இடைத்தேர்தலானது ஒரு உறுப்பினர் உயிரிழந்து, அந்த இடத்தில் வெற்றிடம் ஏற்பட்டாலோ, அல்லது குற்ற வழக்கில் சிறை […]

Categories
தமிழ்

கோபத்தின் விளைவு- மருத்துவருக்குக் கத்திக்குத்து- சரியா?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம். கோபத்தை அடக்கிக் கொள்ள இயலாமல் , எல்லை மீறிச் செல்பவன் அதே கோபத்தால் அழிவான் என்பதற்கு சிறந்த உதாரணம் தற்போதைய பரபரப்பான மருத்துவர் கத்திக்குத்துச் செய்தி. அதேபோல வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற ரீதியில் அந்த மருத்துவரும் கூட ஏதோ ஒரு விதத்தில் இந்த சம்பவம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். காரணம் நானும் எனது சொந்த அனுபவத்தில் பல மருத்துவர்களை சந்தித்தும் , […]

Categories
குட்டி கதை தமிழ்

வடிவேலு, பார்த்திபன் வசன உருவகம் – இராமயணம் சஞ்சீவி மூலிகை காட்சி

அனுமனாக பார்த்திபன். ராமர் வேடத்தில் வடிவேலு. ராமர்: டேய் அனுமாரு இங்க வாடா, நம்ம ஆளுங்களையும் என் தம்பியையும் காப்பாத்தனும்னா, சஞ்சீவி மலையில இருக்கிற மூலிகைய புடுங்கிட்டு வரனும் டா. கொஞ்சம் சீக்கிரம் புடுங்கிட்டு வாடா! அனுமன்: (முணுமுணுத்தபடி) என்னைய பாத்தா பச்செல புடிங்கி மாதிரி தெரியுதா? ராமர்:யப்பா நீதான் நம்ம டீம்ல நான் என்ன சொன்னாலும் செய்வ, அதனால தான் உன்கிட்ட சொல்றேன். கொஞ்சம் கோச்சுக்காம, குரங்கு சேட்டையெல்லாம் செய்யாம, தயவு செஞ்சு கொஞ்சம் சீக்கிரம் […]

Categories
குட்டி கதை தமிழ்

விருந்தோம்பல் – குறளுடன் குட்டிக்கதைகள்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல் குறள் 84 மேற்கண்ட திருக்குறளின் பொருளானது, வீட்டிற்கு வந்தவர்களுக்கு மலர்ந்த முகத்துடன் நல்ல விருந்தோம்பல் செய்பவர்களின் இல்லத்திலே திருமகள் குடியிருப்பாள். இந்தக் குறளை விளக்கும் விதமாக ஒரு குட்டிக் கதை உள்ளது. இந்தக் கதையின் காலம் தமிழ் கடைச்சங்க காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதர் வசித்து வந்தார். அவர் ஒரு வியாபாரி, அவ்வப்போது வெளியூர் பயணங்கள் செல்ல நேர்ந்த காரணத்தால் அவருக்கு […]