Categories
சிறுகதை தமிழ்

வரதட்சணை- சிறுகதை.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வீட்டில் அனைவரும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

அந்த வீட்டின் தேவதையை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே மணப்பொருத்தம் பார்த்து மாப்பிள்ளை, பெண் இருவரும் புகைப்படம் பார்த்து பிடித்துப்போய், கிட்டதட்ட உறுதி செய்வதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு.

பெண்ணுக்கு ஒரு அண்ணன், அன்பான மதினி, வயோதிக அம்மாவும், அப்பாவும். அண்ணனுக்கு பிறகு நீண்ட நாள் கழித்து இவள் பிறந்திருக்கிறாள்.

எதிர்பார்த்த நேரத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட விருந்து உபசரிப்புகள் தடபுடலாக முடிந்தது.

தாம்பூலம் மாற்றி உறுதி செய்து விடலாம் என பேச்சு ஆரம்பிக்க, மாப்பிள்ளையின் தாயார் பேச ஆரம்பிக்கிறார்.

“எங்களுக்கு இருக்கிறது ஒரே பையன்.
எம் பொண்ணுக்கு 100 சவரன் நகை போட்டு கல்யாணம் முடிச்சு வச்சேன்.
நீங்களும் அதுக்கு குறையாம செஞ்சிடுங்க. மத்தபடி மாப்பிள்ளைக்கு ஏதாவது செய்யனும்னா செய்ங்க. சீர் வரிசை செஞ்சிடுங்க.
கல்யாண செலவு பாதி பாதி பிரிச்சுக்கலாம். ஹனிமூனுக்கு உள்நாடு இல்லாம ஏதாவது ஃபாரின் அனுப்புங்க…“ என்று அடுக்கிக்கொண்டிருக்க,

பெண்ணின் தாயார் குறுக்கிட்டு, ”ஏமா இவருடைய பென்ஷனும், பையனோட வருமானமும் தாம்மா!
பையன் அவன் பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனிக்கனும் வேற. நீங்க என்னம்மா இவளோ கேட்குறீங்க?“ என்று பேசி முடிப்பதற்குள்

வெடுக்கென, இந்தாம்மா ”நாங்க எதுவும் வற்புறுத்தல, இஷ்டம் இருந்தா பாப்போம் இல்லாட்டி நாங்க கிளம்புறோம்“னு முகத்தில் அறைந்தாற் போல பேச, குறுக்கிடுகிறாள் பெண்ணின் மதினி!

“நீங்க சொல்றத செஞ்சுடுறோம்மா!
என் கல்யாணத்துக்கு எங்க அப்பா 70 சவரன் நகை போட்டாரு, மாப்பிள்ளை க்கு 10 சவரன் போட்டாரு. இதெல்லாம் நானோ என் வீட்டுக்காரரோ கேட்டு வாங்கிக்கல. பெருமைக்காக என் மாமியார் போட சொன்னாங்க.
என் அப்பா ரொம்ப நொந்து சீரழிஞ்சு இத போட்டாரு. இது இப்ப இங்க சும்மா தான் இருக்கு. யாருமே எப்பயும் 70 சவரன் நகைய கைல கழுத்துல மாட்டிக்கிட்டு திரியுறதில்லையே!“

ஒப்பிட்டுப் படம்
(இணையத்தில் பதிப்பிறக்கியது)

“மணமேடையில இருக்கிற அந்த 4 மணிநேரத்துல தற்பெருமைக்காக ஒவ்வொரு பெண்ணோட, அப்பாவும் அண்ணனும் படுற கஷ்டம் எனக்கு தெரியும். இன்னிக்கு என் மாமியாருக்கு அது புரிஞ்சுருக்கு.”

“இன்னொரு நாள் அது உங்களுக்கு புரியலாம்.”

“நீங்க கேட்கிற எதையும் குறை இல்லாம என் வீட்டுக்காரர் செய்வாரு.”

“தட்டு மாத்திட்டு தயக்கம் இல்லாம வீட்டுக்கு போங்கமா” என்று அந்த பெண்ணின் மதினி பேசியதை கேட்டு வரதட்சனை பேய்கள் இரண்டும் வாயடைத்து போய், கூனிக்குருகி நின்றன!

தொடர்ந்து வாசிக்க, நினைவுகள்.

  • ஆண்- பெண் நட்பு
    ஆண் – பெண் நட்பு. ஆரோக்கியமான விஷயம். உரிமை காட்டும், உயிரைக் கொடுக்கும் ஆண் நண்பர்கள் உயிர் நட்புதான் என்றாலும்,பெண் தோழி என்பது ஆண்களுக்கு ஒலி கிரீடம் தான். டேய் என்னடா பண்ற சாப்டியா? வீட்ல அம்மா எப்படி இருக்காங்க? என்ன செய்றாங்க? அவங்களுக்கு உதவி பண்ணு ஒழுங்கா சாப்புடு என்று அக்கறையாகப் பேசும் பெண் தோழிகள் மனதிற்கு சுகம் தான்..என்றுமே இனிமை தான். ஆயிரம் ஆண் நண்பர்கள் இருந்தாலும் ஒரு ஆணுக்கோ, ஆயிரம் பெண் தோழிகள் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கோ இந்த ஆண்-… Read more: ஆண்- பெண் நட்பு
  • சிறு குறு வியாபாரிகளை நசுக்கும் கார்ப்பரேட் நுணுக்கம்
    முந்தின நாள் மாலை 7.15 மணிக்கு குட் பேட் அக்லி படத்திற்கு மீண்டும் பதிவு செய்து சிறிது காரணங்களால் வெகு தாமதமாகி போக முடிநாமல் போனது.சரி வீட்டில் இருந்தாலும் பொழுது போகாது என்று கிளம்பி திரையரங்கம் இருக்கும் அந்த வணிக வளாகம் வரை சென்றோம்.ஏதாவது சாப்பிட்டு வீடு திரும்பலாம் என்று. தற்செயலாக எனது பர்ஃப்யூம் காலி என்பது நினைவில் வரவே அங்கிருக்கும் டி மார்ட் உள்ளே நுழையலாம் என்ற எண்ணம்.எனக்குப் பொதுவாக இந்த மிகப்பெரிய வணிக வளாகங்களில் மலிவு விலையில் பொருட்களை வாங்கி பணத்தை… Read more: சிறு குறு வியாபாரிகளை நசுக்கும் கார்ப்பரேட் நுணுக்கம்
  • சபாஷ் சரியான முடிவு! – தெலுங்கானாவின் புதிய இட ஒதுக்கீடு முயற்சி
    சமூக நீதியை நிலைநாட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஆமாம். ஒரு குறிப்பிட்ட சாதிய பின்புலத்தில் பிறந்து, அந்த சாதிக்கான ஒதுக்கீடுகளைப் பெற்று பொருளாதார ரீதியாகவும், வாழ்க்கைத் தரத்திலும் ஓரளவுக்கு உயர்ந்து விட்ட பல குடும்பங்களை, குழுக்களை க்ரீமி லேயர், அதாவது பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவென கண்டெடுத்து அவர்கள் மீண்டும் அந்த சலுகைகளை உபயோகிக்க முடியாமல் தடுக்கும் ஒரு திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது. இருந்தாலும் இந்தத் திட்டம் தாழ்த்தப்பட்ட  சமூகத்தை சார்ந்தவரை பொருளாதார அடிப்படையில் பிரிக்கும் பகுப்புகளாக இன்னும்… Read more: சபாஷ் சரியான முடிவு! – தெலுங்கானாவின் புதிய இட ஒதுக்கீடு முயற்சி
  • குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.
    இதோ மீண்டும் துவங்கிவிட்டார் இசை அரசன் தமது இம்சையை. குட் பேட் அக்லி படத்தில் தனது பழைய பாடல்கள் உபயோகிக்கப்பட்டிருப்பதால் தனக்கு ஐந்து கோடி பணம் தர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது தேவையா என்று நாம் பேசினால் அதெப்படி தவறாகும் என்று ஒரு கூட்டம் கிளம்பி வரும். இப்போது இளையராஜாவின் இந்தச் செயல் தேவையில்லாத ஒன்று என்று பேசுபவர்கள் இளையராஜாவின் ரசிகர்கள் அல்ல என்றும், மேலும் அவர்களில் சிலருக்கு ஜாதிய கட்டமைப்புப் பின்புலமும் தீவிரமாக ஆராயப்பட்டு ஒரு மாதிரி சாயமும் பூசப்படுகிறது.… Read more: குருவிக் கூட்டிற்கு வாடகை கேட்ட ஆலமரம்.
  • இ(து)ன்பச் சுற்றுலா!
    இரு நண்பர்களுக்கிடையிலான உரையாடல். நபர் 1: என்ன மச்சான் வெயில் இந்தப் பொள பொளக்குது.நபர் 2: ஆமா, மச்சான்.இப்பத்தான் சித்திரை பிறந்திருக்கு.இப்பவே வெயில் இப்படி இருக்குனா இன்னும் அக்னி வெயில்லாம் வரப்ப நம்ம உசுரோட இருப்போமானே தெரியலியே மச்சான். நபர் 1: ஆமாடா இதுல இந்த சனியன் புடிச்ச டிராபிக் வேற. ச்சேய். காலைல நல்லா குளிச்சி மொழுகி பளபளனு வேலைக்குக் கிளம்பினா, வேலைக்குப் போயி சேரக்குள்ள எம் மூஞ்சியே எனக்கே அடையாளம் தெரியாத போயிடுது மச்சான். நபர் 2: அட ஆம மச்சான்… Read more: இ(து)ன்பச் சுற்றுலா!
  • முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?
    இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. என்ற திருக்குறளை அன்றாடம் சாமானியனும் மனதில் வைத்துக்கொண்டால் சொல்லாடல் எப்போதுமே சுகம் தான். சாமானியனுக்கே சொல்லாடல் அதாவது பேசும் மொழி என்பது முக்கியமானதாகி விட்டது.நாம் பேசும் வார்த்தைகளின் இனிமை தான் நம் எதிரில் இருப்பவரிடம் நமக்கான அடையாளத்தைக் காண்பிக்கும் ஒளித்திரை. அப்படி இருக்கும் போது ஒரு மாநிலத்தின் முக்கிய பிரிவில் மந்திரி பதவி வகிக்கும் அல்லது அந்தப் பதவிக்கான தகுதியுடைய ஒரு மூத்த கட்சி உறுப்பினர் எப்படிப் பேச வேண்டும்? ஒரு பொது மேடையில் ஏறி,… Read more: முன்னாள் உயர் கல்வித்துறையா? கலவித்துறையா?