இன்றைய நாட்களில் மீம்கள் என்ற வகையிலான கேலி உருவகங்கள் அதிகப்படியான மக்களால் விரும்பப்படுகிறது.
ஒரு திரைப்படத்தின் பிரபலமான காட்சியை வேறொரு நிகழ்வுக்கு உருவகப்படுத்தி கேலி செய்வது நடைமுறை.
முன்பும் இது போன்ற கேலி செய்யும் வழக்கம் இருந்தது. ஆனால் அது கேலிச் சித்திரங்களாகவோ அல்லது எழுத்து வடிவிலோ இருந்தது.
உதாரணமாக பாரதியார் நடத்திய இதழில் கேலிச்சித்திரங்கள் பிரபலம். சமீபத்திய இந்து பத்திரிக்கை வரை நாம் அதைக் கண்டிருக்கலாம்.
அதேபோல, துக்ளக் என்ற வார இதழில் சோ அவர்கள் கேலி உருவகக் கதைகளை எழுதுவது வழக்கம்.
இன்று நமது முதல் முயற்சியாக அவ்வாறான ஒரு கேலி உருவகக் கதையிலிருந்து உருவாக்குகிறோம். இது தமிழக வெற்றிக் கழகத்தின் உருவாக்கம் பற்றிய ஒரு சிறு கேலி உருவகத் தொகுப்பு. இதன் வரவேற்பைப் பொறுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற கதைகள் எழுதலாமா வேண்டாமா என்பதை தீர்மானிப்போம்.
திரு.விஜய் அவர்கள் நடித்த குருவி திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளை வைத்து தான் இந்த உருவகக் கதை.
முதல் காட்சி இதோ.
இங்கு விஜய் கார் பந்தயத்தில் களமிறங்கும் காட்சியில் தயாரிப்பு உதயநிதி ஸ்டாலின் என்று வருகிறதல்லவா.
அதை அப்படியே நிகழ்காலத்தில் பொருத்தலாம்
எவ்வளவோ பிரச்சினைகளை சந்தித்த விஜய் அவர்கள், கட்சி ஆரம்பிப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் இப்போது உதயநிதியின் தயாரிப்பில் அதாவது, உதயநிதி திமுகவில் வளர்வதைக்கண்டு கோபமடைந்து தானும் கட்சியைத் துவக்குகிறார்.
இந்த காட்சியில் விவேக் பேசும் வசனம்.
எங்க ஆளு ரேஸ்ல கலந்துக்கிற வரைக்கும் தான் வெறும் வேலு. ரேஸ்னு வந்துட்டா வெற்றி வேலு.
இந்த வசனத்தை மனதில் கொண்டே தனது கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிடுகிறார்.
அடுத்தது கீழே காட்டப்பட்டிருப்பது, விஜயின் பந்தயக் கார். அதாவது இந்த டப்பா காரை வைத்து தான் பந்தயத்தில் கலந்து கொள்கிறார்
இந்த கார் அவரது கட்சியின் மூத்த உறுப்பினர், கொறடா, செயலாளர் என எல்லா பதவியையும் வகிக்கும் திரு.புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு ஒத்துப்போகிறது.
அடுத்தது பந்தயக்காட்சி. அவர் எதிர்பார்த்தது போலவே பாதி பந்தயத்தில் அந்த கார் வேலையைக் காட்டுகிறது.
அதாவது திரு.புஸ்ஸி ஆனந்த், தொண்டர்களிடம், வேலையும் வேண்டாம், போனஸும் வேண்டாம், என் தலைவனப் பாக்கப் போறேனு தெருவுல நிற்குமாறு பேசினாரே, அதுபோலவே அந்த வாகனமும் ஆக்ஸலரேட்டர் வயர் அறுந்து போகிறது.
அதை லாவகமாக சமாளிக்கிறார், தளபதி்.
அதாவது அறுந்து போன வயரை வாயில் கடித்து வண்டியை ஓட்டி பந்தயத்தில் வெல்கிறார்
அதேபோல இந்த ஓட்டை வாய் கொறாடா செய்யும் காரியங்களை சமாளித்து, வாயில் வயரைக்கடித்து 2026 தேர்தலில் வெல்வாரா தளபதி?
பார்க்கலாம்.
வெல்லப்போவது, வாயா அல்லது வயரா?
தொடர்ந்து வாசிக்க,
இதுதானாப்பா ஜனநாயகம்? இதுவா கட்சிக் கொள்கை?
செயற்கை நுண்ணறிவு – எப்படி வேலை செய்கிறது?
புதிய பதிவுகள் பற்றிய அறிவிப்புகள் பெற நினைவுகள் whatsapp சேனல்