கதை மற்றும் திரைக்கதை பற்றிய முழு வெளிப்பாடும் இல்லாவிட்டாலும், சில பாராட்டுதலுக்காவும், சில விமர்சனங்களுக்காகவும் ஆங்காங்கே சிலவற்றை வெளிப்படுத்த உள்ளோம். சினிமா பார்க்காதவர்கள் கவனத்துல் கொள்ளவும். முதலில் இந்தப்படத்திற்கு ஏன் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றன என்பதே புரியவில்லை.படம் பார்ப்பதற்கே நான் ஒரு எதிர்மறை நோக்கத்துடன் தான் சென்றேன். ஆனால் ஏமாற்றமோ, மோசமோ இல்லை. சராசரிக்கு மேற்பட்ட வகை படம் என்றே குறிப்பிடலாம். படத்தின் முன்னோட்டத்தில் காட்டப்பட்டது போல, படத்தில் கதாநாயகன் ஒரு அதிரடி காவல் கண்காணிப்பாளர். என்கவுண்டர் […]
