இதற்கு முன் வெளியான ஆசிரியர் குறிப்பை வாசிக்க, நினைவுகளை பற்றி 01 – பதிப்பாசிரியரின் குறிப்பு
செப்டம்பர் 14, 2024
அன்புள்ள வாசகர்களுக்கு,
நினைவுகள் தளத்தின் முன்பக்கம் கட்டுரை வகைப்பாடுகளுடன் பிரிக்கப்பட்டு காட்டப்படுவதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். முன்பக்கத்தில் ஒவ்வொரு தலைப்பிலும் புதிய பதிவுகள் 5 அல்லது 6 மட்டுமே தென்படும். இன்று செய்த மேம்படுத்துதலுக்கு பின், ஒவ்வொரு தலைப்பையும் கிளிக் செய்தால் அந்த தலைப்பினுள் உள்ள பழைய கட்டுரைகளின் பட்டியல் வெளிப்படும். இந்த பக்கங்களையும், அதில் உள்ள கருத்துக்கள் காலப்போக்கில் மேம்படுத்த வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.
நினைவுகள் வலைத்தளத்தில் கட்டுரைகள் எழுதலாம் என்று தீர்மானித்த போது “இங்கே சினிமா கட்டுரைகள் வெளியிடலாமா?” என்ற கேள்வி வந்தது. “என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய முகநூல் சினிமா விமர்சனங்களை விரும்பி வாசிப்பார்கள். அப்படியே வருபவர்கள் மற்ற பதிவுகளையும் வாசிக்க கூடும்” என்று அருண் பாரதி கூறினார்.
தமிழகத்தின் கருத்தாக்கத்திலும் அரசியலிலும் சினிமாவும் அதன் பாதிப்பும் ஊடுருவி இருக்கிறது. அதன் பின்னணியிலேயே பல விவாதங்களும் நடக்கின்றன. மேலும் தமிழகத்தின் பல சார்பான மக்களையும் சென்றடையும் தாக்கமும் சினிமாவிடையே உண்டு.
சினிமாவின் தாக்கத்தின் வெளிப்பாடாக, GOAT இன் விமர்சனம் வெளியாகி ஒரே நாளில் பொதுவாக இங்கே பகிரப்படும் தரவுகளை போல 5 மடங்கு அதிக வாசிப்பை பெற்றது ஆச்சரியபடுவதற்கில்லை. வெளிவரும் போதெல்லாம் டிக்கெட் திண்டாட்டம் ஏற்படுத்த கூடிய தளபதி விஜய், நல்ல script உள்ள படத்தில் நடித்தால், வானை அளந்துவிடலாம். இருந்தாலும் அரை வேக்காடு கதைகளில் நடித்து நம்மை ஏன் சோதனை செய்கிறார்? என்ற ஆதங்கத்தை அருண் பாரதி வெளிப்படுத்துகிறார்.
இது போல வர்த்தக ரீதியாக வெற்றிப்பெரும் சினிமாக்கள், வேறு கலைநயம் மிகுந்த தரமான திரைப்படங்கள் உருவாக வழி வகுக்கிறது என்று சொல்பவர்கள் உண்டு. அது போல சினிமா தரவுகளை வாசிக்க வந்தவர்கள் நினைவுகள் வலைத்தளத்தின் மற்ற பதிவுகளையும் வாசித்தால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். அப்படிப்பட்ட சில பதிவுகளை கீழே காணலாம்.
இந்திய தேசத்தின் 78ஆம் சுதந்திர தின விழாவை கொண்டாடிய நமக்கு, ஒரு நாட்டுக்கு என்ன தேவை என்ற கேள்வியை இங்கு அருண் பாரதி முன்வைக்கிறார்.
அரசாங்கத்திற்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிர்த்தும் இருப்பது சகஜமே. அரசாங்கங்கள் மனிதர்களை ஒடுக்கும் போது அவர்கள் பொங்கி எழுவதும் நிகழக்கூடியாதே. அப்பேர்ப்பட்ட கலகங்கள் நமது ஊர்களிலும் நடந்திருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்து மரணம் எய்திய இரு வேறு மனிதர்களின் கதையை இங்கே அருண் பாரதி விவரிக்கிறார்.
தியாகி இமானுவேல் சேகரனார்- குறிப்பு ; பூலித்தேவர்- வெள்ளையர் எதிர்ப்பை முன்னெடுத்த வீரரின் வரலாறு
அவ்வாறு நடக்காமல் ஆட்சியாளர்களையும், பணக்காரர்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது அன்னாட்டின் அறிஞர்களின் பொறுப்பாக இருக்கிறது. அப்படி ஒளவையார் செய்த ராஜதந்திரத்தின் கதை இங்கே பகிரப்படுகிறது.
தனி மனிதனை ஒழுக்கம் தவறாமல் காப்பதில் பெரும் பங்கு இறை நம்பிக்கைக்கு உண்டு. ஒன்றை செய்யக்கூடாது என்று மதங்கள் சொல்லிவிட்டால் சுற்றியிருப்பவர்களை மீறி அதை செய்வது, நீங்கள் இறை நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் எளிதல்ல. மீறி செய்தால் அவர்கள் நம்பிக்கையை அவமதிப்பு செய்ததற்கான குற்றத்திற்கு ஆளாவோம். அப்படி இருக்கையில் இந்த மத குருக்கள் சொல்வதை எல்லாம் ஆராய்ச்சியில்லாமல் எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வாறு இறைச்சி உண்பதை வெவ்வேறு மதங்கள் எப்பாடு பார்க்கின்றன என்பதை இங்கு முன்வைக்கிறார். நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா? – 02
மனிதர்களிடயே வித்தியாசங்கள் இல்லாமல் இல்லை. சொல்லப்போனால் வித்தியாசங்கள் தாம் நம்மை வகைப்படுத்துகின்றன. ஒருவனுக்கு மூக்கு சப்பையாக இருப்பதும், அவன் கன்னம் வற்றி இருப்பதும், கால் உயரமாக இருப்பதும் என்று வேறுபாடுகளால் கட்டப்பட்டிருக்கும் மனித குலம் ஒன்றி வாழ ஏதாவது வழி உண்டா என்று கேட்கமுடியும். அப்படி இருக்கையில், மனிதர்களின் எண்ணங்களும் அவர்களின் பேச்சும் எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனைகளை இங்கு வெளிப்படுத்துகிறார்:
குறளுடன் குட்டிக்கதை – உயர்ந்த சிந்தனை , இனிய பேச்சின் தன்மையும் நன்மையும்.
ஒருவருடன் நண்பராக பழகும் பொழுது மிக எளிதில் நம் வாழ்க்கை பல இடங்களில் ஒன்றிப்போகிறது என்று காண முடிகிறது. உணவு முறைகளும், கேலிக்கையும், கவிதத்துவமும் பெரும்பாலும் ஒன்றியே போகிறது.
அப்படி தன் வாழ்வின் அழகியலால் நம்மை ஈரத்த இரு வேறு கலை படைப்புகளை பற்றிய விரிவுரை சென்ற மாதம் வெளிவந்திருக்கிறது – வாழை – பாராட்டுப் பத்திரம் (திரை விமர்சனம்), வள்ளியம்மா பேராண்டி – இசைதொகுப்பின் ஆய்வு. இவற்றுடன், வாழ்வின் முடிவை ஆராயும் போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்பட விமர்சனமும் வாசகர்கள் மறக்க வேண்டாம்.
மேற்கூறிய இரு படைப்புகளும் இயற்கையில் எல்லோரும் சமம் என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துகிறது. அப்படி, இயற்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடத்தை கவிதை வடிவில் இங்கே கொடுக்கிறார். இயற்கையின் தன்மையை மாற்றாமல் அதிலிருத்து நமக்கு தேவையான பொருட்களை மட்டும் அழிவில்லாமல் எடுத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கும் தங்கலான்- ஆடை வடிவமைப்பாளர் பற்றிய சிறுகுறிப்பு இங்கே வெளிவந்திருக்கிறது.
நம் ஒழுகத்தை பற்றியும், உணவு பழக்கங்களை பற்றியும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் அருண் பாரதி, நம்மை சீட்டின் நுனியில் அமரவைத்து, சிறப்பான கருத்தை வெளிப்படுத்தும், இடக்கு மடக்கான இரு வேறு சிறுகதைகளைகளால் (தீதும் நன்றும் பிறர்தரவாரா – சிறுகதை, சாலையோர காதல் கதை) மேலும் குதூகலப்படுத்துகிறார்.
நினைவுகளை வலைத்தளத்தை தமிழ் வாசகர்கள் விரும்பி வாசிக்கும் இலக்கமாக உருவாக்கும் பணியில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளியான பல்வேறு பதிவுகளுக்கும், ஒரு முன்னுரையாக இந்த பதிவை அணுகலாம். இந்த காலத்தில் வாசகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவை தொடருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்,
சிவப்ரேம்
(பதிப்பாசிரியர், நினைவுகள்)