ஒரு செயலை செய்யும் போது அதற்கான பலன் கிடைக்காவிட்டால் சோர்வடைந்து அந்த செயலில் இருந்து பின்வாங்குதல் என்பது நம்மில் பலருக்கும் வாடிக்கையான ஒன்று.
அப்படியான நமக்கான ஒரு முன்மாதிரி வினேஷ் போகட். இன்று இந்தியர்களின் இதயம் நொறுங்கிப்போக காரணமானவர்.
ஆனால் அவரும் பிறக்கும் போது நம்மைப்போன்ற ஒரு சாதாரண ஆள்தானே?
மல்யுத்தத்தில் ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டிக்குத் தகுதியான ஒரே இந்தியப் பெண்மனி என்ற சாதனை புரிந்து, அடுத்த நாளே இறுதிப்போட்டிக்கு தகுதியான ஆள் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற வரலாறையும் படைத்திருக்கிறார்.
இதை விட ஒருமோசமான சூழல் நமக்கு வந்துவிடப்போகிறதா என்ன?
போன வருடம் போராட்டம் போராட்டம் என்று சீரழிந்த இவர் சாதாரணமாக இந்த இடத்தை அடைந்துவிடவில்லை. இதற்கு முன்னரே ஒலிம்பிக் வரை சென்று பதக்கம் பெறாமல் திரும்பியிருக்கிறார்.
அதில்லாமல் போரட்டாம் காரணமாக பல இன்னல்களை சந்தித்த இவர், இந்த ஒலிம்பிக்கிலும் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை.
உலகின் முதல் வீராங்கனை, ஒலிம்பிக் சாம்பியனான ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அதன்பிறகு உக்ரைன் மற்றும் க்யூபா நாடுகளை சார்ந்த கடினமான வீராங்கனைகளை வீழ்த்திய பிறகே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
நேற்று போட்டிக்கு முன்னர் 49 சொச்சமாக இருந்த இவரது உடல் எடை, எடுத்துக்கொண்ட உணவு மற்றும் ஊட்டச்சத்து காரணமாக 2 கிலோ வரை கூடி போட்டி முடிந்தபோது 52 கிலோவாக இருந்துள்ளது.
போட்டி முடிந்த அடுத்த பத்து நிமிடங்களில் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்த இவர் விடிய விடிய தூங்காமல் தொடர்ச்சியாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது எடையை கிட்டதட்ட 2 கிலோ நெருக்கிக் குறைத்துள்ளார்.
உடலில் ரத்தம் வெளியேற்றியும், முடியை வெட்டியும் கூட இறுதியாக இவரது எடை 50 கிலோ 100 கிராமாக இருந்த காரணத்தால், 100 கிராம் அதிகம் என்று 50 கிலோ எடைப்பிரிவிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் வென்ற போட்டிகளும் செல்லாது. பதக்கம் ஏதும் கிடையாது.
இதைவிட மோசமான சூழல் நமக்கு வருமா?
ஒலிம்பிக்கிற்கு போவது எவ்வளவு சிரமம், அதிலும் இறுதிப்போட்டிக்கு போவது எவ்வளவு கடினம், அதிலும் உலகின் முதல் வீராங்கனையை வீழ்த்தி உள்ளே நுழைந்து இதுமாதிரி தகுதிநீக்கம் அடைவது எவ்வளவு பெரிய மனவேதனை.
ஆனாலும் அந்தப்பெண் இதோடு ஓயப்போவதில்லை.
அவள் தங்கம் வென்றிடாவிட்டாலும் தங்கமகள் தான்.
அவளது முயற்சி வரலாற்றில் இடம்பெறும்.
இது நமக்கெல்லாம் ஒரு பாடம்.
பலனை எதிர்பாராமல் காரியத்தை செய்யலாம். எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் ஊக்கத்தை மட்டும் கைவிடவே கூடாது.
கசப்பான ஒரு நினைவைத்தந்த இந்த நாளை ஊக்கத்தின் உற்சாகக் காரணியாக மாற்றிக்கொள்வோம்.
என்றென்றும் நினைவில் நிற்கும் வினேஷ் போகாட்டை நினைவுகள் வலைத்தளம் சார்பாகவும், வாசகர்கள் சார்பாகவும் நினைவில் கொள்வோம்.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.