“பிச்சை புகினும் கற்கை நன்றே“
ஒருவருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தாலும் கல்வி கற்பதை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறிய ஔவையின் வழிவந்த தமிழ் சமூகத்தில், நீ நல்லா படி, நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று அரசாங்கமே பல திட்டங்களை முன் எடுத்து செய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாக பல சந்தர்ப்பங்களிலும் இருந்து உள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் நல்ல கல்யறிவு மற்றும் அதிகப்படியான பெண்கல்வி விகிதம் இருக்கும் மாநிலம் என்ற ரீதியில் தமிழகத்தை எப்போதும் அடித்துக்கொள்ள இயலாது.
கல்வியை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களின் வரிசையில் இன்று கோவையில் துவங்க இருக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டமும் ஒன்று.
அரசுப்பள்ளிகளில், அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு, உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இது.
கல்லூரி படிப்பெல்லாம் நமக்கெதற்கு, நம்மிடம் என்ன வசதி இருக்கிறது என்று கூறி பள்ளி படிப்போடு இளைஞர்கள் வேலைக்கு அனுப்பப்படும் சூழ்நிலை தமிழ்நாட்டிலிருந்து சிறிது சிறிதாக மறைந்து வரும் நிலையில், இந்த திட்டம் கல்வி இடைநிற்றலை மேலும் குறைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
சிறிது காலத்திற்கு முந்தைய தரவுகளின் படி பள்ளியிலிருந்து உயர்கல்விக்கு சேரும் விகிதம் (HER- Higher Education Ratio) இந்தியாவில் கிட்டதட்ட 25-30 சதவீதமாக இருக்கிறது.
அதாவது பள்ளிக்கல்வி பயிலும் நூற்றில் 20-30 மாணவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு சேருகின்றனர்.
இந்தியாவின் எதிர்காலத்திட்டமாக 2035 ஆம் ஆண்டுக்குள் இதை 50 சதவீதமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டே உயர்கல்வி விகிதம் 54 விழுக்காடு. இந்தியா இன்னும் 20 ஆண்டுகள் கழித்து எட்டுவதற்குத் தீட்டியிருக்கும் இலக்கை தமிழ்நாடு ஏற்கனவே தாண்டி விட்டது.
இது ஔவை வழியைப்பின்பற்றி நமக்கு வாய்த்த ஆட்சியாளர்கள் கல்விக்கு அளித்த சலுகைகள் இல்லாமல் சாத்தியமில்லை. இந்த தமிழ் புதல்வன் திட்டம் இதற்கு மேலும் ஒரு மணிமகுடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அரசாங்கம் தரும் திட்டங்களை நல்லவிதமா பயன்படுத்துவதில் மக்களின் பங்கு முக்கியமானது. மாதம் 1000 ரூ என்பது நல்லவிதமாக செலவு செய்யப்பட வேண்டும். உதாரணத்திற்கு பேருந்து பயணக் கட்டணமாகவோ, புத்தகங்களுக்காகவோ, அல்லது வேறேனும் நல்ல விதமாக அதை மாணவர்கள் செலவு செய்கிறார்கள் என்கிற பொறுப்பு பெற்றோர்களுடையது.
படிக்க கடன் வாங்கியும், அல்லது காசில்லாமல் படிப்பை நிறுத்தியும் என்ற ஏழ்மையான பல நினைவுகள் நம்மில் பலருக்கும் இந்த நாளில் எட்டிப் பார்க்கலாம். இப்படி ஒரு நாள் நமது வாழ்க்கையில் நாம் சந்திப்போம் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால், இந்த நாள் முக்கியமான ஒன்று.
ஆகஸ்ட் 9, 2024.
திட்டம் துவங்குமிடம்: அரசுக்கலைக்கல்லூரி கோவை.
கல்லூரியில் பயிலும் கல்வியை போல் தாமாக தமக்கு பெற்றுக்கொள்ளும் கல்வியும் முக்கியமானது. இதனை கருத்தில் கொண்டு, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளலாம். வாசித்தலின் சிறப்பை பற்றி வாசிக்க.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.