Categories
அறிவியல் கருத்து தமிழ்

மொபைல் எனும் பகாசூரன் – திரை நேர அறிவுரை

இதற்கு முன்பு வெளிவந்த கடன் எனும் பகாசூரன் வாசிக்க…

சிறிது காலத்திற்கு முன்பு வரை புழக்கத்தில் இல்லாத இந்த மொபைல் அல்லது கைபேசி, இப்போது ஒரு வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கைக்கு சமமாகவோ அல்லது அதற்கும் மேலாகவோ இருக்கிறது.

தகவல் தொடர்பு முன்னேற்றம், உலகம் நம் கையில் என்று மார்தட்டிக் கொண்டாலும் அதில் பல பிரச்சினைகளும் உள்ளது.

மொபைல் மனிதர்களின் நேரத்தை, குறிப்பாக நெருக்கத்தை எடுத்துக்கொள்கிறது. மொபைலுக்கு அடிமை ஆகிப்போகும் மனிதன் சக மனிதனை முகம் கொடுத்துப் பார்ப்பதில்லை.

வயதானவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என இதில் யாரும் இதற்கு விதிவிலக்கு இல்லை.

சரி குழந்தைகள்? 👶

அவர்கள் கதைதான் இன்னும் மோசம்.

இந்த மொபைலுக்கு அடிமையாகி பல குழந்தைகள் மூளைக்கட்டி நோய் வருமளவிற்கு பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இப்போதொல்லாம் நிலாச்சோறு இல்லை.

மொபைல் சோறு தான்.

தூங்க வைப்பது கதை சொல்லும் அன்புள்ள அம்மா இல்லை.

மொபைலில் வரும் தோசையம்மா தான்.

இப்படி பிஞ்சு குழந்தைகளையும் இது விட்டுவைக்கவில்லை.

இதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட சில வழிமுறைகளை American Association of Child and Adolescent Psychiatry, (அதாவது அமெரிக்காவை சார்ந்த குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மனநல அமைப்பு) தெரிவித்துள்ளது.

அதன்படி

6-18 மாத குழந்தைகளுக்கு மொபைல் போன்களில் எதுவும் காட்சிகளோ படமோ காட்டக்கூடாது. தேவைப்பட்டால் தனது சொந்தங்களிடம் வீடியோ கால் பேசும் போது அவர்களை காட்டலாம்.

1.5-2 வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக ஏதாவது கல்வி ரீதியான விஷயங்களைக் காட்டலாம்

2-5 வயது குழந்தைகளுக்கு வார நாட்களில் ஒரு மணி நேரமும், வார இறுதி நாட்களில் 3 மணி நேரமும் கல்வி மற்றும் விளையாட்டு சம்பந்தமான நல்ல விஷயங்களை பார்க்க அனுமதிக்கலாம்.

6 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாம் சொல்வதை புரிந்து்கொள்ளும் பக்குவம் வந்து விடுகிறது. எனவே அவர்களிடம் மொபைல் போனின் அளவீட்டைக்குறைக்க அறிவுறுத்தி நன்கு படிக்கவும், உடல் ரீதியாக ஓடி ஆடி விளையாடவும் அறிவுறுத்தலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கட்டுப்பாடுகள் இருந்தால் நல்லது. கேலி, கிண்டல், சீண்டல், நண்பர்களுடன் அளவளாவல் என்கிற விஷயமெல்லாம் மொபைல் போனுக்குள்ளே தான் நடக்கிறது. அருகருகே இருந்தும் மனிதர்கள் தூரமாகி விட்டார்கள் என்பதற்கு இது முக்கிய காரணமாகி விட்டது.

மொபைல் எனும் பகாசூரனை அறிவெனும் ஆயுதத்தால் வீழ்த்தி ஆக வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.