விஞ்ஞானமும், அறிவியலும் வெண்டைக்காய் தக்காளி போல பழகிப்போன இந்த நாட்களில் கூட நாம் புருவம் உயர்த்தி அதிசயிக்கும் வகையில் முன்னோர்களின் சில கட்டடக் கலைகள் இருக்கத்தான் செய்கின்றன.
தஞ்சை பெரிய கோவிலின் கட்டிட அறிவியலைப்பதிவிட்டு அதிசயித்த நமக்கு இன்னொரு அதிசயமும் பரிட்சையமானது.
அது தற்போதைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவில், நால்கோடா மாவட்டம் பனகல் என்ற பகுதியில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயம்.
இது குன்டுரு சோடாஸ் (தெலுங்கு சோழர்கள்) என்ற மன்னர் வகையறாக்களால் கட்டப்ட்ட கோவில்.
இந்தக் கோவிலில் மூன்று கர்ப்பக்கிரகம் தமிழின் ஆய்த எழுத்தான ” ஃ ” வடிவில் அமைந்திருக்கிறது.
இந்த மூன்று கர்ப்ப்கரிங்களில் சிவன் , விஷ்ணு , மற்றும் சூரிய பகவான் அருள் பாலிக்கின்றனர். ஹிரியும் ,சிவனும் அரிதாக ஒருசேர இருக்கும் கோவில்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோவிலின் அதிசயம் என்னவென்றால் இங்குள்ள சிவன் சன்னதிக்கு எதிரே நான்கு தூண்கள் உள்ளன. அந்த நான்கு தூண்களில் ஏதோ ஒரு தூணின் நிழல் அந்த லிங்கத்தின் மீது விழுகிறது.
அது எந்தத் தூணின் நிழல் என்பதை யாராலும் கண்டறிய இயலவில்லை.
ஏனென்றால் எந்த மனிதன் எந்தத் தூணின் அருகே நின்றாலும் அந்த மனிதனின் நிழல் அந்த லிங்கத்தில் விழுவதில்லை.
இன்னொரு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் அந்த நிழல் சூரியனின் இடப்பெயர்ச்சியைப் பொறுத்து இடம் மாறுவதே இல்லை. முழுநேரமும் ஒரே மாதிரியாகத்தான் அந்த நிழல் அந்த லிங்கத்தின் மீது விழும்.
என்னடா இது சூரியனுக்கு வந்த சோதனை என்பது போல, அந்த நிழல் ஏன் இடம்மாறுவதில்லை, அது எந்தத் தூணின் நிழல் என்பதை இருவரை எந்தக் கொம்பனாலும் கண்டறிய இயலவில்லை.
நிழல் விழும் லிங்கம் என்பதால் தான் இந்த கடவுள் சாயா சோமேஸ்வர் என்று அழைக்கப்படுகிறார்.
சாயா- நிழல்.
செவ்வாய் கிரகத்திலே கால் பதித்துவிட்ட காலத்திலும் இன்னும் கூட பல அவிழ்க்க முடியாத மர்மங்களை உருவாக்கிய நமது முன்னோர்களை நினைத்து, திகைத்துப் பெருமிதம் கொள்கிறோம்.
நினைவுகள் வாசகர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்வதில் பெருமை.