வந்தாரை வாழ வைக்கும் சென்னை. வடக்கு பகுதியிலருந்த வந்த இந்தியர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை அளிக்கும் சென்னை. அவர்கள் ஊர்களை, மாநிலத்தை விட சென்னை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். தமிழகத்தின் தலைநகரம், ஆசியாவின் டெட்ராய்ட், தென்னிந்தியாவின் நுழைவுவாயில், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் என பல பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பிறந்தநாள் இன்று. ஆகஸ்ட் 22,2024 ல் சென்னை இன்று 385 ஆவது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது. அதென்ன ஆகஸ்ட் 22? […]
Month: August 2024
திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து வழிபடும் தலமான மாதா வைஷ்ணோ தேவியின் தலத்தைப் பற்றி வாசித்து, சிந்தித்து, நன்மை அடையலாம் என்ற நோக்கில் இந்த கட்டுரை. ஆண்டுதோறும் கிட்டதட்ட 8 லட்சம் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவதாக தகவல். மாதா வைஷ்ணோ தேவி கோவில் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள கோவில். சக்தி வழிபாட்டிற்கு பிரபலமான இத்தலத்தின் தெய்வம் மாதா ராணி அல்லது வைஷ்ணவி தேவி போன்ற பெயர்களால் […]
நூற்றாண்டு கண்ட கலைஞர் புகழ்
தமிழக அரசியல் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் இவரது பங்கு எல்லையற்றது. கூட்டணி சாதுர்யம், ஆட்சியில் நற்கவனம், மற்றும் பலவகையான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் வல்வராகிய கலைஞர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அரசியல்வாதி என்றாலே நேர்மறையான விமர்சனங்களுக்கு ஈடாக எதிர்மறையான விமர்சனங்களும் இருப்பது நிதர்சனம் தான். ஆனால் நாம் இப்போது அந்த எதிர்மறை விமர்சனங்களை மறந்து அவரிடமிருந்து நாம் பெற்ற இனிய நினைவுகளை மட்டுமே சற்று ஆராயலாம். கலைஞர் என்ற பட்டம் அவரது எழுத்து அவருக்குக் கொடுத்த பரிசு. […]
தெனாலிராமன் விகடகவியான கதை
அக்பருக்கு ஒரு பீர்பால் போல, நமது நாட்டில் கிருஷ்ணதேவ ராயரின் சபையை அலங்கரித்த தெனாலி ராமன் சிறப்பு. விகடகவி என்ற பட்டம் பெற்ற தெனாலி ராமனுக்கு ஏது அத்தகைய அறிவு, எவ்வாறு அப்படி பட்டம் பெற்றார் என்று சினிமா ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருக்கிறார். அந்தப்படத்தின் கதையின்படி மிகவும் வறுமையிலிருக்கும் தெனாலி ராமன் காளியிடம் கடுமையான வேண்டுதலில் இருந்து வரம் பெற்று அந்தப் பட்டத்தையும், கிருஷண் தேவராயரின் அன்பையும் பெறுகிறார். இதற்கு […]
கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி, அதாவது முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி ஆண்ட பறம்பு மலை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. பறம்பு மலை என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட இந்த மலை பிறகு திருநெலக்குன்றம் எனவும், சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும் அழைக்கப்பட்டு இப்போது ப்ரான் மலை என்றும் அறியப்படுகிறது. இது தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து 42 கிமீ தொலைவில் மேற்கிலும், மதுரையிலிருந்து 63 கிமீ தொலைவில் வடக்கிலும் அமைந்துள்ளது. சங்க காலத்தில் […]
ஒரு தோராயமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி அல்லது பேரூராட்சிகளில் இருக்கும் கசாப்பு கடைக்காரர்கள் அனைவரும் இதுபோல இருக்கலாம். இது எனது ஊரின் கசாப்புக் கடைக்காரரைப் பற்றிய எனது நினைவுகள். பளபளப்பான கட்டிடம், டைல்ஸ் பதித்த தளமெல்லாம் கிடையாது. ஒரு சின்ன பெட்டிக்கடை அளவில் இருக்கும் கசாப்புக் கடையில், அந்த கடைக்காரரும் அங்குள்ள ஒரு வேலை ஆளும், அவர்கள் இருவரும் கறிவெட்டும் கட்டைகள், இவை மொத்தமும் அந்த இடத்தை ஆக்கிரமித்து விடும். வேலை ஆள் என்பவர் பெரும்பாலும் […]
பிரிவின் வலியை சொல்லும் ராசாத்தி என்ற பாடலை பற்றி அருண் பாரதி இங்கு எழுதுகிறார். அதே பெயரில் ஒரு பாடலை கொண்ட சமீபத்தில் வெளியாகியிருக்கும் வள்ளியம்மா பேராண்டி என்ற இசைத்தொகுப்பை பற்றி இந்த கட்டுரை. பிக்சன் பிக்சன் (பெரிய மகன்) என்று இவரது அம்மாவும் அப்பாவும் அழைக்க, பிக்சன் இன் உலகத்துக்குள் நுழைகிறோம். “பொக்க பொக்க பொக்கை வள்ளி பாட்டி, you‘re மை ஸ்வீட்டி” என்று விளையாட்டாக ஆரம்பமாக்கிறது இவரது கதை. பிக்சன் என்பவர் வேறு யாருமில்லை […]
பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்அணியென்ப நாட்டிவ் வைந்து திருவள்ளுவர், குறள் 738 இன்று 78 ஆவது சுதந்திர தினத்தை பெருமிதத்துடன் கொண்டாடும் தருணத்தில் இரண்டாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த குறளின்படி நமது நாடு செழிப்பாக உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தக்குறளின் படி நோயற்ற வாழ்வு, நல்ல செல்வம், நல்விளைச்சல், மக்களின் இன்ப வாழ்வு, நற்காவல் ஆகிய இந்த ஐந்தும் தான் ஒரு நாட்டிற்கு அணிகலன். அதாவது நாட்டில் நல்ல […]
78 ஆவது சுதந்திர தினத்திலே அடியெடுத்து வைக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நமது சுதந்திரத்திற்கு காரணமான தியாகங்களை ஒரு முறை நினைத்துப் பெருமிதம் கொள்வோம். இந்த சுதந்திரம் எத்தனையோ இன்னல்களைத்தாண்டி நமக்குக் கிடைத்தது. அப்படி சுதந்திரத்திற்காக நடந்த பல சம்பவங்களில் நம் நினைவிலிருந்து நீங்காத சம்பவம் ஜாலியன்வாலாபாக் படுகொலை. அதை நாம் இந்த நன்னாளில் ஒருமுறை நினைவில் கொண்டு அதற்கான சந்தர்பம் அமைந்த சூழல் எப்படி இருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். பஞ்சாப் மாகாணத்தில் அமிர்தசரஸ் என்ற நகரிலுள்ள ஜாலியன் […]
உலகம் விசித்திரமானது. பல இடங்களிலும், பல விதப்பட்ட, விசித்திரமான விஷயங்கள் இயற்கையாகவோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டதாகவோ இருக்கும். அப்படி ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்த ஒரு உணவகத்தைப்பற்றி நினைவில் கொள்ளலாம். கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தின் மத்திய இரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் இந்தியன் காபி ஹவுஸ் என்ற உணவகம் பற்றியது தான் இந்தப் பதிவு. அங்கே என்ன அப்படி வித்தியாசம் என்றால், என் வயதுக்கு அப்போது வாத்துக்கறியும், வாத்து முட்டையுமே வித்தியாசமானது தான். அது கேரளாவில் […]