Categories
கருத்து தமிழ்

நினைவுகளை பற்றி 01 – பதிப்பாசிரியரின் குறிப்பு

updated on August 12, 2024

அன்புள்ள வாசகர்களுக்கு, 

இங்கு வாசித்தது உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் தளத்தை புக்மார்க் செய்யுங்கள்.

நினைவுகள் எப்படி பட்ட தளம்?

நினைவுகள் என்பது நம் நினைவில் கொள்ள வேண்டிய சமாச்சாரங்களை பதிவு செய்யும் தளம். Journal என்ற ஆங்கில சொல்லுக்கு நேரத்தோடு பதிவிடுதல் என்று அர்த்தம். அதாவது ஒரு நாளின் நினைவுகளை, நாட்டு நடப்புகளை, பழைய செய்திகளை, இலக்கியத்தை, நமக்கென புரிந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தொடர்ந்து பதிவு செய்தல்.

இங்கு எழுதும் அருண் பாரதிக்கு journalist என்ற பட்டம் பொருந்தும். கடந்த இரு மாதங்களில் இவர் கோவில்களின் கட்டிடவியல் துவங்கி, சமூகத்தில் நடக்கும் அக்கிரமங்கள் வரை பல பதிவுகளை ஏற்றியிருக்கிறார். எழுத்து ஆவணம் இல்லாத செவி வழி செய்திகள், குட்டி கதைகள் மட்டுமல்லாது அறிவியல், வரலாறு என்ற பலதரப்பட்ட தரவுகளையும் வாசகர்களுக்காக சேகரித்திருக்கிறார்.

நமக்கு தெரிந்த விஷயங்களை, சரியென நம்பும் கருத்துக்களை அடுத்தவர்களுக்கு, அடுத்த தலைமுறைக்கு, இன்றைய டெக்னாலஜியின் உதவியுடன், கொடுக்க நினைவுகள் வலைத்தளம் முற்படுகிறது.

சோசியல் மீடியா போதாதா இதை செய்ய? 

சோசியல் மீடியாவில் வரும் செய்திகள் நொடிகளில் மறைந்து விடுன்கின்றன. சில நேரங்களில் நம்மால் அதை திரும்ப கண்டுபிடிக்க கூட முடிவதில்லை. கேரளா நிலச்சரிவை பற்றி வாசித்து முடிக்கும் முன் எவனோ ATM இல் திருடும் வீடியோ வந்துவிடுகிறது. இரண்டு நாட்கள் பட்ஜெட் ஐ கழுவி ஊற்றுகிறார்கள் பின் ஒலிம்பிக்ஸ் வந்துவிடுகிறது. 

மிக முக்கியமாக, சோசியல் மீடியா உங்களது உணர்ச்சியை தூண்டுவத்தில் குறியாக இருக்கிறது. கோவம், ஆசை, பொறாமை, தற்பெருமை, கவலை போன்ற உணர்ச்சிகளை இடை விடாது தூண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இத்தோடு ஒருவனுக்கு என்ன வேண்டும், என்ன பிடிக்கிறது என்று தெரிந்து கொண்டு அதை மட்டுமே கொடுப்பதால் மக்கள் குழுக்கலாக பிரிந்து, அவர்கள் போல் எண்ணமுள்ளவர்களுடன் மட்டுமே உறவாடி, கூட்ட மனப்பான்மைக்கு ஆள் ஆகிவிடுகிறார்கள். அல்லது அடுத்தவன் சொல்வதை கேட்டு கேட்டு தமக்கு எல்லாம் தெரிந்தது போல் ஒரு பிறமை உருவாகிவிடுகிறது. 

இவற்றில் இருந்தும், விளம்பரங்களில் இருந்தும் தப்பித்து, பொதுவான வாசகர்களுக்கு தரமான வாசகங்கள் கொடுப்பது எங்கள் நோக்கம். 

எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். இதன் பொருட்டு வாசகர்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய இந்த பக்கத்தில் உள்ள கமெண்ட் செக்ஷனை பயன் படுத்தலாம். எங்கள் பதிவுகளில் திருத்தங்களோ, பரிந்துரைகளோ இருந்தால் இருந்தால் இங்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தளத்தில் உங்களது எழுத்துக்களை, சமூக கருத்து உள்ள புகைப்படங்களை பதிவு செய்ய விரும்பினால் கீழிருக்கும் கமெண்ட் டப்பாவை பயன்படுத்தி எங்களை தொடர்பு கொள்ளலாம். வாசகர்களுடனான தொடர்புகளுக்கான முறைகள் வருங்காலத்தில் சீர் செய்யபடும் என எதிர்பார்களாம்.

அன்புடன்,

சிவப்ரேம், எடிட்டர்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள் கீழே,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *