Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

தற்கால நிகழ்வுகள் – சென்னையில் தொழில் வரி உயர்வு

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. தொழில் வரி என்பது நாம் அனைவரும் செலுத்தும் மாநில அரசின் வரி.

தொழில் வரி என்றால் வியாபாரம் செய்பவர் அல்லது தொழில் செய்பவர் மட்டுமே கட்டும் வரி என்பதல்ல பொருள். ஒவ்வொரு தொழிலாளியும், முதலாளியும் அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கட்டும் வரி.

உதாரணத்துக்கு, நான் ஒரு மிகப்பெரிய உணவகத்தில் சர்வராக வேலை செய்து மாதம் ரூ 20,000 சம்பளம் பெறுகிறேன் எனில் எனது வருமானத்திற்கு ஏற்ப எனக்கும் தொழில் வரி உண்டு.

எனது முதலாளி மாதம் 3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என்றால் அவருக்கு அவரது வருமானத்திற்கு ஏற்ப வரி உண்டு.

வருமான வரி என்பது மத்திய அரசாங்கத்துக்குப் போகும் வரி வருவாய்.

தொழில் வரி என்பது மாநில அரசின் வரி வருவாய்.

நான், அதாவது உணவகத்தில் வேலை பார்க்கும் சரவர், மாதம் 20000 அதாவது வருடம் 240000 ரூ சம்பாதிப்பதால், வருமான வரியில் விலக்குக் கிடைத்து விடும். ஆனால் தொழில் வரியிலிருந்து விலக்கு இல்லை. மாதம் 135 ரூ வரி கட்டியே ஆக வேண்டும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை எனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்படும்.

அந்த தொழில் வரியில் தான் இப்போது 35 சதவீத உயர்வு. மாதம் ரூ 21,000 க்கு கீழே சம்பாதிப்பவர்களுக்கு வரியில் உயர்வு இல்லை. ஆனால் அதற்கு மேல் ரக வாரியாக வரி இருந்த பழைய தொகையில் 35 சதவீதம் வரை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களை பாதிக்க இருக்கிறது. ஆம் வேலை செய்யும் ஒவ்வொருவரும் வரி செலுத்தப்போகிறோம்.

அதேபோல் வரி உயர்வால் ஆகும் செலவை வணிக நிறுவனங்கள் மக்கள் தலையில் தான் கட்டப் போகிறார்கள். எப்படியானாலும் இறுதியில் பாதிக்கப்படப்போவது சாமானியனே!

மாநில அரசின் சில நல்ல மக்கள் நல திட்டங்களை நினைவில் கொண்டால் இந்த வரி உயர்வு ஒரு பெரும் சுமையாகத் தோன்றாது.

நமக்காகத் தானே! என்ற பரந்த மனப்பான்மை இருந்தால் இந்த உயர்வு ஒரு சுமையாமையாது.

இதற்கு முன் எழுதப்பட்ட அரசு சம்பத்தமான பதிவுகளை வாசிக்க

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கும் பணம் எப்படி கணக்கிடப்படுகிறது, தெரிந்து கொள்ள