வந்தாரை வாழ வைக்கும் சென்னை.
வடக்கு பகுதியிலருந்த வந்த இந்தியர்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை அளிக்கும் சென்னை. அவர்கள் ஊர்களை, மாநிலத்தை விட சென்னை பாதுகாப்பாகவும், வசதியாகவும் இருப்பதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
தமிழகத்தின் தலைநகரம், ஆசியாவின் டெட்ராய்ட், தென்னிந்தியாவின் நுழைவுவாயில், முதலீட்டாளர்களின் முதல் விருப்பம் என பல பெருமைகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரின் பிறந்தநாள் இன்று.
ஆகஸ்ட் 22,2024 ல் சென்னை இன்று 385 ஆவது ஆண்டு பிறந்தநாளை கொண்டாடுகிறது.
அதென்ன ஆகஸ்ட் 22?
கிழக்கிந்திய கம்பெனி வந்தவாசியை ஆட்சி செய்த தாமல் வெங்கடப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க, வாங்குதலுக்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட நாள்.
அந்த தாமல் வெங்கடப்ப நாயக்கரின் அப்பா சென்னப்ப நாயக்கரின் நினைவாகத்தான் இது சென்னை என்று பெயரிடப்பட்டது.
2004 ஆம் ஆண்டிலிருந்து இந்த சென்னை பிறந்த தினமானது தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னெடுத்தவர்கள் பத்திரிக்கையாளர்களான வின்சென்ட் டி சோசா, சசி நாயர் மற்றும் வரலாற்றாளர் முத்தையா அவர்களாகும். ஆரம்பகாலங்களில் சிறிய அளவில் இருந்த கொண்டாட்டங்கள் வருடந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
2004 க்கு முன்னதாக 1939 ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒரு சிறிய அளவிலான கொண்டாட்டம் அதன் சொந்த செலவில் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் 350 ஆண்டான 1989 ல் மெட்ராஸ் 350 என்ற பெயரில் கட்டுமான வல்லுநர் ப்ரான்க்பெட் பெர்னான்டஸ் என்பவரால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு நினைவுச் சின்னம் கட்டப்பட்டது.
தமிழகத்தின் ஒவ்வொரு மக்களுக்கும் சென்னையோடு ஒரு தொடர்பு என்பது நிச்சயம் இல்லாமல் இல்லை.
சென்னையின் பிறந்தநாளில் நாமும் மகிழ்ச்சி கொள்வோம்.
சென்னை வாசிகளுக்கும் சென்னையில் அல்லாத பிற சென்னை விரும்பிகளுக்கும் இனிய சென்னை நாள் நல்வாழ்த்துகள்.
தொடர்ந்து வாசிக்க, மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..?
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.