Categories
கருத்து தமிழ்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா? – 02

இந்த கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க. பன்றி இறைச்சியைப்பற்றி பேசி கட்டுரையை முடிந்திருந்தோம்.அதாவது பன்றி இறைச்சி என்பது இஸ்லாமிய மதத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அந்த பன்றி கொழுப்பு தடவப்பட்டிருந்த வெடிகளின் திரிகளை வாயில் கடிக்க வேண்டிய கட்டாயம் வந்த காரணத்தால் தான் சிப்பாய் கலகம் ஏற்பட்டது என்றும் பரவராக அறியப்பட்ட ஒன்று. ஆனால் ஏன்? ஆடு 🐐 மாடுகளின் 🐮 மீது இல்லாத இரக்கம் பன்றிகளின் 🐷 மீது மட்டும் எதற்காக? நான் […]

Categories
இலக்கியம் கருத்து தமிழ்

கொரோனா சொன்ன பாடம் – கவிதை

காற்றில் நஞ்சை கலந்துகாசெனும் பேயை அடைந்திட,ஓசோனில் ஓட்டை விழுந்துஓயாத இரைச்சலும் பெருகி,பூச்சியும் மாண்டொழிந்துபுல்வெளிகள் காய்ந்து கருக, ஆட்டமும் அதிகம் ஆகிஆள்பவன் நான் எனக்கருதி,ஓட்டமாய் ஓடியே மனிதன்ஒன்பதாம் கோளையும் தாண்டிட,பூமியே தனக்கென கருதிபூதமாய் மாறிய மனிதன்அத்தனை வளத்தையும் சுரண்டிமொத்தமாய் அபகரிக்க நினைத்தான். ஆர்ப்பரித்து  வந்த கடல்ஆட்களை கொன்று குவித்தும்,சிலிர்த்து எழுந்த கோளதுவாய்பிளந்து கொன்று குவித்தும்,வெடித்து கிளம்பிய எரிமலைவெப்பத்தால் கருக்கி எரித்தும்திருந்தவே இல்லை மனிதன்திமிர் பிடித்ததாலே! பொறுத்துக் கொண்ட அன்னைபொங்கி விட்டாள் இன்றுகொரோனா எனும் கிருமிகொலை செய்கிறது நின்று,அகங்காரம் கொண்ட […]

Categories
குட்டி கதை தமிழ் வரலாறு

பண்டைய தமிழகத்தின் நாகரீகம் – கற்றோர் சிறப்பு

பண்டைய தமிழகத்தில் முதல், இடை, கடை என்ற மூன்று சங்க காலங்களிலும் தமிழை வளர்த்த புலவர்கள் பெரும் மதிப்போடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள் என்பதை அறிவோம். அதில் நமக்கு வந்து சேர்ந்த சில கதைகளைத்தான் நாம் சற்று நினைவில் கொள்ளப் போகிறோம். “நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சிவபெருமானையே குற்றம் சாட்டிய நக்கீரர் பெருமானை அறயாதோரும் இலர். தன் உயிரை விட தமிழ் வளர்க்கும் மூதாட்டியின் உயிரே முக்கியம் என ஔவைக்கு அரிய நெல்லிக்கனியைத் தந்த […]

Categories
தமிழ் நினைவுகள்

சென்னையின் கிரீடம்- கத்திப்பாரா பாலம்

க்ளோவர் இலை வடிவ மேம்பாலம். இந்த வகையான மேம்பாலம் போக்குவரத்து மிக அதிகமான இடங்களில், வாகனங்கள் ஒரு திசையிலிருந்து இரண்டு அல்லது மூன்று திசைகளுக்கு பிரிந்து தடையில்லாமல் செல்வதற்காக ஏற்படுத்தப்படும் பாலம் . இந்தப்பாலங்கள் கீழ்க்கண்ட இந்த இலையின் வடிவில் இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக, தேவைகளுக்கு ஏற்ப, இணைக்கும் திசைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகிறது. அமெரிக்காவின் வெர்ஜினியா, கலிபோர்னியா, மிச்சிகன், போன்ற மாநிலங்களிலும், சில ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரிலும் இந்த […]

Categories
இலக்கியம் தமிழ்

குறளுடன் குட்டிக்கதை – உயர்ந்த சிந்தனை

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருவள்ளுவர், குறள் 596 நாம் சாதிக்க நினைக்கும் காரியங்களை சிறியதாக நினைக்காமல் உயர்ந்த லட்சியங்களை சிந்தித்து அதை நோக்கிப் பயணிக்க வேண்டும்.அது முடியுமா முடியாதா என்ற சிந்தனையை விட்டு, ஒருவேளை அது முடியாவிட்டாலும் கூட அதை நான் அடைந்து விடுவேன் என்ற நம்பிக்கையை இழந்து விடக்கூடாது என்பதை விளக்குகிறது இந்தக் குறள். இன்றைய சூழலில் மக்களின் மனநிலை மிகவும் குறுகிப் போனது.நம்மால் இது முடியாது, நம்மால் அது முடியாது, […]

Categories
சினிமா தமிழ்

போகுமிடம் வெகு தூரமில்லை – திரைப்பட விமர்சனம்

போகுமிடம் வெகு தூரமில்லை. அருமையான வாசகம். அருமையான சினிமாவும் கூட. சுஜாதா போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களே சினிமாவில் தனது கால் பதித்த பிறகு தான் மிகப் பிரபலாமானவர்களாக மாறினார்கள். புத்தகங்கள் செய்ய வேண்டிய வேலையை தற்போது சில சினிமாக்கள் செய்து கொண்டிருக்கிறது. ஒரு நல்ல கதையம்சம் உள்ள சினிமா இங்கே மிகப்பெரிய வெற்றி அடைவதைக்காட்டிலும் மசாலா வகையான படங்களே இங்கே அதிகம் வெற்றி அடைகிறது. மக்களுக்கு கருத்துகளை விட, பொழுதுபோவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் ஒரு வித்தியாசமான, […]

Categories
சினிமா தமிழ்

வாழை – பாராட்டுப் பத்திரம் (திரை விமர்சனம்)

ஒரு ஊருல ராஜா ஒருத்தன் இருந்தானாம்! ராஜா சொல்லுற கதையெல்லாம் கண்ணீர் கதை தானாம்! அவன் நிமிர்ந்து பார்த்தா வானம்,குனிஞ்சி பார்த்தா பூமி,இடையில் அவன்தான் பாரம்.கால் நடக்க நடக்க நீளும் தூரம். மாரி செல்வராஜ் (“ஒரு ஊருல ராஜா” பாடல் வரிகள், இசை சந்தோஷ் நாராயணன்) சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, சில சினிமாக்கள், புத்தகங்களைப்போல நல்ல கருத்துகளைத் தருவதாகவும், சில சினிமாக்கள் நமது வாழ்க்கையில் நாம் கடந்து வந்த நல்ல மற்றும் கசப்பான […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள்

நான் உண்ணும் இறைச்சி எனக்கு உகந்ததா?

இறைச்சி. விடுமுறை நாட்கள் மற்றும் விருந்து என்றாலே பல மனிதர்களின் முதல் தேர்வு இறைச்சி தான். இவற்றின் பல வகைகளையும், இவற்றை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். சிக்கன் மற்றும் மீன் இறைச்சி வகைகள் என்றால் பெரும்பாலான இறைச்சி பிரியர்களும் சமரசமாக ஏற்றுக் கொள்வார்கள். மட்டன் இறைச்சியை ஒரு சிலர் ஏற்றுக்கொள்வதில்லை. சிகப்பு இறைச்சி உடலில் இரத்தக் கொதிப்பு அதிகமாகக் காரணமாகக் கூடும் என்று காரணம் சொல்லப்படுகிறது அவர்களால். மட்டன் எனப்படும் ஆட்டிறைச்சியில் […]

Categories
கருத்து தமிழ்

இனிய பேச்சின் தன்மையும் நன்மையும்

வாயை அசைத்தால் சத்தம் என்பது எல்லோருக்கும் வரும். வார்த்தைகளை இணைத்தால் வாக்கியம் உருவாகும். ஆனால் பேசும் பேச்சு மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்க்கிறதா, அவர்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா என்பதைப் பொறுத்து தான் நமது பேச்சுக்கான மரியாதை கிடைக்கிறது. சிலர் பேசுவதைக் கேட்டால் நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று கூடத் தோன்றும். பேசும் போது கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். Dear Brothers and sisters of America என்ற வார்த்தைகள் உருவாக்கிய அந்த மகிழ்ச்சியைப்போல. சிலரது பேச்சுகள் […]

Categories
தமிழ் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கிளி (கிழிந்த) ஜோதிடம் – அனுபவங்கள்

ஜோதிடம், ஜாதகம், ஓலைச்சுவடி, கிளி ஜோசியம், கை ரேகை பலன், என்று விதவிதமாக, மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும்? என்ற ரீதியில் பல கோணங்களில் கணித்து சொல்ல பல வகையான ஆட்களை காண முடிகிறது. பெரும்பாலும் ஜாதகம் அதில் பிரதானமான ஒன்றாக உள்ளது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடத்தும் முன்பு இருவரின் ஜாதகங்களும் ஒப்பிடப்பட்டு நன்கு ஆராயப்பட்ட பிறகே பத்திரிக்கை அடிக்கப்படுகிறது. அப்படி இருந்தாலும் கூட சில திருமணங்கள் விவாகரத்தில் முடிவதற்கான காரணம் இருவரின் மனம் […]