Categories
தமிழ் வரலாறு

வரலாற்று விழுதுகள்: வேலூர் சிப்பாய் கிளர்ச்சி

அடக்குமுறைகளும், அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் காலம் காலமாக நிகழும் ஒன்றுதான். இதில் முக்கியமாக குறிக்கத்தகுந்த வகையில் நிகழ்ந்த சம்பவம் வேலூர் சிப்பாய் கிளர்ச்சி.

1806 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கிளர்ச்சி, பின்நாளில் 1857 ல் நிகழ்ந்த கிளர்ச்சியின் முன்னோடி.

ஆங்கிலேய இராணுவத்தில் பணிபுரிந்த இந்திய சிப்பாய்கள், தமது சமயக்குறியீடுகளான விபூதி, நாமம் போன்றவற்றை அணியக்கூடாது எனவும், கிர்தா வை எடுத்து விட வேண்டும் எனவும், இராணுவ அதிகாரி வற்புறுத்திய காரணத்தாலும், மேலும் ஐரோப்பிய இராணுவ உடையோடு, குழாய் வடிவத் தொப்பி அணிய வேண்டும் என்று கட்டளை இட்டதால், இந்திய இந்து மற்றும் இஸ்லாமிய சமயங்களைச்சார்ந்த சிப்பாய்கள் கடும் கோபம் கொண்டனர்.

இதனால் கோபமடைந்த பலருக்கும் தலைமையேற்று இந்த விதிமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த கலககக்காரர்களின் தலைவனுக்கு 600 பிரம்படி கிடைத்தது.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த சிப்பாய்கள், ஜூலை 10,1806 ல் ஒரு பெரிய கலகத்தைச் செய்தனர். அதிகாலை தூக்கத்திலிருந்த பல உயர் அதகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும் சிப்பாய்களாக இருந்த 350 ஆங்கிலேயர்களில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

வேலூரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் தான் இந்த கிளர்ச்சியைத் தூண்டி விட்டதாகவும் நம்பப்பட்டது.

ஆனால் பெரிய தலைவனோ, மையப்படுத்துதலோ, அல்லது குறிக்கோள்களோ இல்லாமல் கோபத்தில் தோன்றிய கிளர்ச்சி என்பதால் உடனடியாக நீர்த்துப்போனது. இதனால் வெளியிலுருந்து வந்த ஆங்கிலேய மீட்புக்குழு வேலூர் கோட்டைய மிக எளிதாக மீட்டது.

இந்த மீட்சியின் போது இந்திய சிப்பாய்கள் 350 பேர்கள் கொல்லப்பட்டனர். சிலபேர் கைது செய்யபட்டனர், கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பீரங்கிகளின் வாயிலில் கட்டி வைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

தலைவன் இல்லாத படை காணாமல் போகும் என்ற வாசகத்திற்கு ஏற்ப, திடீரென கோபத்தில் வெடித்த கிளர்ச்சி, பெரிதாகத் தொடரவில்லை என்றாலும் 1857ன் இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சிக்கு, முன்னோடி என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

மேலும் வரலாற்று சுவடுகள் வாசிக்க,

பிளாசி போர்

சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி.