Categories
ஆன்மீகம் தமிழ்

கட்டிட கலை அதிசயம்: தஞ்சை பெரிய கோவில்

உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.

தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி அறியாதவரும் உளரோ?

உலகின் எட்டாவது அதிசயமாக தகுதியானதென போற்றப்படும் தமிழனின் பெருமையைப்பரைசாற்றும் கட்டிடக்கலையமைப்பைக் கொண்ட மிகப்பெருமையான தஞ்சை பெரியகோவிலைப்பற்றி சிறிது விளக்கமளிக்க நினைவுகள் பக்கமும் பெருமை கொள்கிறது.

இங்கே நாம் கோவில் கட்டிடக்கலை பற்றி சிறிது பேசி, அது உருவான வரலாறு பற்றி பேசலாம். செவிவழியாக முன்னோர்களிடம், ஆசிரியர்களிடம் கேட்ட சில விஷயங்கள் இங்கே பகிரப்படுகின்றன. பல யூகங்களோடு இங்கே ஓரளவுக்கான விளக்கமும் கிடைக்கலாம்.

இந்தியநாட்டின் பல பகுதிகளிலும் வெற்றி வாகை சூடி, இமயத்தில் கொடி நாட்டி, கடல் தாண்டி கடாரம் கொண்ட மாமன்னன் இராசராசன் தான் அழிந்தபிறகு, தனது புகழும் பெயரும் அழியாமலிருக்கும் வண்ணம் உலகிற்கு எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆவலில் எழுப்பியது தான் இந்த பொக்கிஷம்.

பொதுவாக போர் கைதிகள், கொல்லப்படுவதும், அல்லது ஒருவேளை உணவளிக்கப்பட்டு, பாதாள சிறைகளில் அடைக்கப்பட்டு சிதைக்கப்படுவதுமே வழக்கமாக இருந்த அந்த காலகட்டத்தில், போர்க்கைதிகளுக்கு ஒரு வாய்ப்பளித்து, அவர்களை மக்களோடு மக்களாக பாவித்து, தனது பெருமையான படைப்பில் அவர்களுக்கு வேலை செய்யவும் ஒரு பெரிய வாய்ப்பு அளித்தார்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் முற்றிலும் கற்களால் ஆன கோவில் ஒரு ஆற்றங்கரையில் உள்ளது.

அங்கே அருகில் மலைகளும் இல்லை..அவ்வளவு கல் எப்படி எங்க இருந்து எவ்வளவு நேரம் பயணித்துக் கொண்டுவரப்பட்டிருக்கும்? இன்றைய நாள் வரையிலும் இது புதிராகவே உள்ளது.

பிரமிக்க தக்கும் இன்னொரு விஷயம், 20 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன கோபுர உச்சி. இது எப்படி உருவாக்கப்பட்டது என்பது ஒரு புதிர் என்றால், இது எப்படி 216 அடி உயரத்தில் வைக்கப்பட்டது என்பது இன்னொரு புதிர்.

இந்தக்காலம் போல க்ரேன்கள் எல்லாம் இல்லை, இரும்புக்கயிற்றில் ஏத்துவதற்கு. பல யானைகளின் உதவியோடு, சருகலான பாதை அமைத்து அந்த உயரம் எட்டப்பட்டிருக்கலாம். ஆனால் 216 அடி உயரத்தை அடைய சறுகலான பாதை எவ்வளவு நீளம் தேவைப்பட்டிருக்கும்?

ஒரு முக்கோணத்தினுடைய உயரம், கர்ணம் என்ற ரீதியில் கணக்கிட்டால், 216 அடி நீளத்திற்கு, கர்ணம் 305 அடி அமையும் விதமாக 1 அடிக்கு 1 அடி உயரமடையும் சாய்வு விகிதத்தில் இந்த உயரம் எட்டப்பட்டிருக்கலாம். இந்த மேட்டில் யானைகள் ஏற முடியுமா, அல்லது 2 அடி நீளத்திற்கு ஒரு அடி உயரம் என்ற கணக்கில் அமைத்தார்களா?

அவ்வளவு மண் எங்கே கிடைத்திருக்கும்? அந்த மண் பாதை யானைகள் 20 டன் எடை கொண்ட கற்களைத்தூக்கி நடந்து செல்லும் அளவிற்கு எப்படி இறுக்கமடைந்திருக்கும்?

இந்தக்காலம் மாதிரி ரோடு ரோலர்களா இருந்தது?

நினைக்க நினைக்க வியப்பு தான்.

சரி கட்டுமானத்தில் இத்தனை வியப்பு என்றால், நிர்வாகத்தில்?

ஒரு பெரிய கோவில் என்றால் சாதாரண விஷயமா?
தினசரி பூசை துவங்கி, பிரதோஷ , சிவராத்திரி கொண்டாட்டம் வரை, பிரசாதம், கோவில் பராமரிப்பு, விளக்குகளுக்கு எண்ணெய், நெய், பிரசாதம் செய்ய தானியம்?

இன்னும் எத்தனை நுணுக்கமான விஷயங்கள் உண்டு?

ஒரு இதழில் இதைப்பற்றி சிறப்புக்கட்டுரை ஒன்றை வாசித்தேன்.
ராசராசனின் நிர்வாகத்திறமை தஞ்சை பெரிய கோவில் பராமரிப்பிலேயே வியப்பைத்தரும் என்று.

அதாவது மாதத்தில் இந்த இந்த நாட்களில் கோவிலுக்கு நெய் ,தானியம் முதலியவை இந்த வீடுகளில் இருந்து வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அந்த தானிய , நெய் வகையறாக்களை உற்பத்தி செய்ய, மாடுகள், நிலம் எல்லாம் வழங்கப்பட்டு, கிடைப்பவற்றில் கோவிலுக்கு கொடுத்தது போக மீதி அவர்களின் வாழ்வாதாரமாக உபயோகப்படும்.

இப்படி 365 நாட்களுக்கும் ஒரு பட்டியல் உண்டு. அந்தப்பட்டியலில் இருக்கும் முதன்மை நபர்களால் என்றாவது ஒரு நாள் பொருள் தரமுடியாத சூழ்நிலை வரலாம். அந்த சூழ்நிலைக்கு உப பட்டியலும் இருக்குமாம்.

அடுத்த குடமுழுக்கு வரை கோவில் பராமரிப்புக்கான பட்டியல் முதலிலேயே முடிவு செய்யப்பட்டிருக்குமாம். அடேங்கப்பா.

இந்த கணினி காலத்தில் நாம் போடும் திட்டம் 4 ஆவது நாளில் தவறுகிறது. அன்று அவர் 12 வருடத்திற்கு திட்டமிட்டிருக்கிறார் தவறாத படியாக.

இது தான் இராசராசன். இப்படிப்பட்ட ஒரு அரசனை, அவனது கலைப்படைப்பைப் பற்றி அளவளாவியதில் நினைவுகள் பெருமை கொள்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்திருக்கும் சாயா சோமேஸ்வரர் ஆலயத்தின் கட்டிட கலையை பற்றி வாசிக்க.