Categories
சினிமா தமிழ்

சினிமா வரலாறு: சத்யஜிட் ரே

திரைப்படம் என்பது பெரும்பாலான சாமானிய மக்களின் பொழுதுபோக்கு என்றாலும், அது வெறுமனே பொழுதுபோக்கு என்ற ரீதியில் மறந்து விடக்கூடியதல்ல.

ஒவ்வொரு திரை ரசிகரின் மனதிலும் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தும் திரைப்படத்துறையில் சாதித்தவர்களின் நினைவுகளும் நம்மில் நிலைத்திருப்பது என்னவோ உண்மை.

அப்படியான ஒரு திரை ஜாம்பவான் இயக்குனர் சத்யஜித்ரே.

யதார்த்தமாக ஒருவர் ஏதாவது திரைப்படத்தைப்பற்றி விமர்சிக்கும் போது, மனசுல பெரிய சத்யஜித்ரே்னு நினைப்பு என்று சொல்லப்படுவது உண்டு.

ஏனென்றால் அவர் இயக்குனரோடு அல்லாமல் திரை விமர்சகராகவும் இருந்தவர். மேலும் திரைக்கதை, வசனம், பாடல்கள் இசை என்ற அனைத்தையும் உருவாக்கும் பன்முகத்தன்மை கொண்டவர்.

புனைவுகதைகள் படைப்பவராகவும், எழுத்தாளராகவும் கூட அறியப்படுகிறார். அச்சுக்கூடமும் அமைத்து, தன் எழுத்துப் பணிகளை மேற்கொண்டிருந்தவராகவும் அறியப்படுகிறார்.

இவர் ஆவணப்படம், குறும்படம், திரைப்படம் உட்பட 36 படங்களை இயற்றியுள்ளார்

இவரது பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, மற்றும் அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்கள் உலகப் புகழ் பெற்றவை.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சார்பாக கௌரவப்பட்டம் கிடைத்தது. 1992 ல் உயரிய விருதான ஆஸ்கார் (அகாடமி கௌரவ பரிசு) கிடைத்தது.

சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த இசையமைப்பு, சிறந்த சிறுவர் படம், சிறப்பு விருது ஆகிய பிரிவுகளில் மொத்தம் 14 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்

1955 ல் பதேர் பதஞ்சலியில் துவங்கி 1991 ல் அகந்துக் வரை, கிட்டதட்ட 36 வருடங்கள் சினிமாத்துறையில் இயக்குனர்களின் உச்சமாக இருந்தார் என்பது பொருத்தம்.

தமிழ் மக்களின் மனதோடு நெருக்கமில்லாதவராக இருந்தாலும் சினிமாவை அறிந்தவர்கள் இவரது பெயரை தவறாமல் எங்கேயாவது கேட்டிருக்கக்கூடும்

தற்போதைய காலம் மாதிரி பேன் இந்தியா படங்கள், அல்லது மொழிபெயர்ப்புகள் எளிதாக இருந்தால் இந்தியா முழுக்க, இந்த இயக்குனர் பல ரசிகர்களைக் கவர்ந்திருப்பார்

நினைவுகள் வாசகர்கள், வாய்ப்பு இருந்தால் இவரது பிரபலமான படங்களைத்தேடிப் பார்க்கலாமே? அப்படி என்னதான் மாயாஜாலம் உள்ளதென்று.

நினைவுகள் வாசகர்களோடு, ஒரு நல்ல மாற்று மொழி இயக்குனர் பற்றிய நினைவுகளைப் பகிர்வதில் பெருமிதம்