Categories
இலக்கியம் தமிழ் பாடல்

பிரிவின் வலியை சொல்லும் பாடல் வரிகள்

காதல் என்பதைக் கடந்திராதோரும் உளரோ?

காதல் தோல்விகளும், நமக்குப் பிடித்த பெண், சூழ்நிலை காரணமாக வேறொருவன் கை பிடிப்பதைப் பார்க்கும் அவலநிலையும் இங்கே பலருக்கும் புதிதல்ல.

அப்படி ஒரு சூழலுக்கு எழுதப்பட்ட அருமையான பாடல் வரிகளை நினைவுகள் வாசகர்களோடு ஒரு முறை பகிர்ந்து கொண்டு ரசித்து தோல்வியை நினைத்து உருகுவதில் சுகமடைகிறோம்.

கல்யாணம் முடிந்து மகிழ்ச்சி இல்லாமல் போகும் அந்தப் பெண் ,
அவள் காதலை நினைத்து வருந்துகிறாளோ? அல்லது பெற்றவர்களை , ஊரைப்பிரிந்து புது இடம் புகுவதால் அழுகிறாளோ தெரியவில்லை.

புதுக் கல்யாணச் சேலையிலே

கண்ணீரத் துடைச்சிக்கிட்டுப் போறவதான்!

என்ற வரிகள் அவளின் சோகத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்த வரிகள் அற்புதமானது. கவிஞரின் உவமை இங்கே வெளிப்படுகிறது.

காதலன் தன் காதலை உதறிவிட்டு அவள் வேறொருவனுடன் போகிறாள் என்பதை

நான் தந்த மல்லிகைய நட்டாத்தில் விட்டுப்புட்டு,

அரளிப்பூச்சூடி அழுதுக்கிட்டே போறவளாம்!

என்ற வரிகளில், ஏ.ஆர்.ரஹ்மான் பாடுவதை கேட்கும் போது காதல் தோல்வி கண்டோர் கண்கள் கலங்காமலிருப்பதில்லை.

பாடல் வரிகளின் ஆழம் நமக்கு நமது பழைய நினைவுகளைக் கொண்டு வந்து பரிசளித்து விடுகிறது.

துக்கமே என்றாலும் நினைவுகள் சுகம் தானே?

அடுத்த வரிகளில் தன் காதலி மீதான கோபத்தின் வெளிப்பாடு

கடலைக்காட்டுக்குள்ள கை அடிச்சி சொன்ன புள்ள ,

காத்துல எழுதனும் பொம்பளைங்க சொன்ன சொல்ல

மேற்கோள் காடப்பட்டுள்ள பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வைரமுத்து

தன் காதலியின் மீதான வெறுப்பு ஒட்டுமொத்த பெண்களின் வார்த்தைகளை நம்பக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு அவனது இதயத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவைப் பிரதிபலிக்கிறது.

மேற்கூறிய படி சுகமோ, துக்கமோ நினைவுகள் என்பது வரமே.

நினைவுகள் வாசகர்களோடு இதைப்பகிர்ந்து கொண்டு தங்கள் காதல் நினைவுகளை மீண்டும் துளிர்விடச் செய்வதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.