Categories
தமிழ் நினைவுகள்

பாம்பன் பாலத்தின் நினைவுகள்

இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.

நல்ல சிந்தனைகளை மனிதனோடு இணைக்கும் வாசிப்பு என்ற பாலத்தில் பயணித்து, எமது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டு உலகறிவு மற்றும் மனமகிழ்வைப பெறும் நினைவுகள் வாசகர்களோடு, யாம் இன்று பாம்பன் பாலம் பற்றி ஒரு சிந்தனையை உருவாக்க விழைகிறோம்.

பாம்பன் பாலம்- தமிழகத்தின் தெற்குப்பகுதியிலுள்ள பாம்பன் என்ற சிறிய தீவை, மண்டபம் என்ற தரைப்பரப்புடன் இணைக்கும் நவீன கட்டிக்கலை வியப்பு.

இந்தியாவின் முதல் கடற்பாலம் என்ற பெருமையோடு அல்லாமல் 2010 மும்பையின் பாந்த்ரா பாலம் திறக்கப்படும் வரை, மிக நீளமான பாலம் என்ற பெருமையையும் தன்னுள்ளே தக்கவைத்திருந்த பாலம்.

2065 மீ அதாவது 2 கிமீ தூரத்திற்கு கடல்பரப்பிலிருந்து 41 அடி உயரத்தில் கம்பீரமாக நின்ற பாலம்.

இந்தப்பாலத்தின் இன்னொரு சிறப்பு, இதன் மையப்பகுதியில் அமைந்துள்ள Bascule பாலம், அதாவது தனது சொந்த எடை கொண்டே இயங்கி திறந்து மூடும் பாலம். கப்பல்கள் கடப்பதற்காக இந்த அமைப்பு உள்ளது.

1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ல் திறக்கப்பட்ட இந்தப்பாலம் 2020 ஆம் ஆண்டு வரை, பல மனிதர்களை, பல ரயில் வண்டிகளை, பல சரக்குக்கப்பல்களை இராமேஸ்வரத்திலிருந்து மண்டபத்திற்கும் ,மண்டபத்திலிருந்து இராமேஸ்வரத்திற்கும் கொண்டுசேர்த்துள்ளது.

1964 ல் பெரும் புயல் கண்டு சிதைந்த போதிலும், புதுப்பிக்கப்பட்ட தனது பணியை தொடர்ந்து சிறப்பாக செய்தது. ஒற்றையாளாக இருந்த இந்தப்பாலத்திற்குத் துணையாக 1988 ல் ஒரு சாலைப்போக்குவரத்துப் பாலம் இணைந்தது.

பல கனவுகளை, மகிழ்வுகளை, பிரார்த்தனைகளை, நினைவுகளை, சோகங்களை, பிரிவுகளை சுமந்த இந்தப்பாலத்தின் சகாப்தம் 2020ல் 106 ஆண்டுகளுக்குப்பிறகு முடிவுக்கு வந்தது.

இதைப்போல இன்னொரு பாலம் உருவாக்க இந்திய அரசு 250 கோடி ரூபாய்க்கு திட்டம் வகுத்து, கிட்டத்தட்ட பணிகள் முடிந்து தயாராகி விட்டது.

புதிய பாம்பன் பாலத்தில் இப்போதைக்கு வெறும் கல்லும் மணலும் கம்பியும் மட்டுமே இருக்கும்.
புதிய பாம்பன் பாலத்தில் பயணிக்கும் போது பழைய பாம்பனின் நினைவுகளும், நம்மோடு சேர்ந்தே பயணிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.