நினைவுகள் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வரம்.
ஏதேதோ நினைவுகளின் வாட்டாத்தால் நினைவுகளைப்பற்றி ஒரு கட்டுரை, நினைவுகள் வலைதளத்தில்.
நினைவுகள் என்பது மனித வாழ்வுக்கு இன்றியமையாத வரம்.
ஏதேதோ நினைவுகளின் வாட்டாத்தால் நினைவுகளைப்பற்றி ஒரு கட்டுரை, நினைவுகள் வலைதளத்தில்.
1906 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய கப்பல் கம்பெனி. தூத்துக்குடி துறைமுகத்திலும் , இந்தியப்பெருங்கடலிலும் கொடிகட்டிப்பறந்த ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க, எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த SSNC. ஆனால் இது காகிதத்தில் கப்பல் செய்யும் சமாச்சாரம் அல்ல.அன்றைய காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பு. 2019 ஆம் ஆண்டில் 2000 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பீடு. இதை 40 பேரின் பங்களிப்புடன் செய்து காண்பித்தார் வ.உ.சி.இதில் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பாண்டித்துரைத்தேவர் என்பவருடையது. […]
இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.
ஒரு பொருளை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ளும் போது இல்லாத ஒரு விஷயம், அதை ஒருவரிடமிருந்து செவி வழியே கேட்கும் போது இருக்கும்.
அது நமது கற்பனைத்திறன்.
கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு. கரியமிலவாயு எப்படி உருவாகிறது? உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது. செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல.. பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் […]
பழைய பொக்கிஷ சினிமா 1967 ல் வெளியான ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். 1967 ல் சஸ்பென்ஸ் த்ரில்லரா என்று வியப்பு ஏற்படலாம்! ஆனால் இந்தப்படத்தைப் பார்த்தால் இப்படி ஒரு சஸ்பென்ஸ் படமா? என்று கண்டிப்பாக வியப்பு ஏற்படும். படம் துவங்கும் முதல் காட்சியில் படத்தின் இயக்குனர் , த்ரிலோகச்சந்தர் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.“தயவு செய்து படத்தின் கதையை வெளியே சொல்ல வேண்டாம்” என்று. இப்படி ஒரு புதுமை, தமிழ் சினிமாவில் அதுவரை நிகழ்ந்தது இல்லை. […]
மெட்ராஸ்ல லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க..? நவநாகரீக சென்னையின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடியேறிய எனக்கு எதிர்வீட்டில் வசிப்பவர், ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. அலுவலகத்தில் பணி நேரத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் அந்த குடியிருப்பிலும். தண்ணீர் மின்விசைப்பம்புகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது. சுவிட்ச் எல்லோருக்கும் பொதுவாக வெளியே இருந்தாலும் கூட, தண்ணீர் தேவை என்றால் அவரிடம் சொல்லியே சுவிட்ச் போட வேண்டும்.அந்த குடியிருப்பின் வீட்டு உரிமையாளர்கள் கூட ஒரு ஒழுக்கமான பராமரிப்பு […]
இளம் பருவத்தில் பலரும் வரலாற்றை விரும்பி படிப்பது இல்லை. அதுபற்றிய தெளிவான சிந்தனையும் இல்லை. சிறுவர்களாக இருக்கும் போது பல வருடங்ளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, நமக்கு ஆர்வத்தை தூண்டாமல், தூங்க வைக்கின்றன. வாழ்க்கை பாடமாக அமைய வேண்டிய வரலாறு வாழ்கையின் துவக்கத்தில் மட்டும் வந்து போகும் கனவாக இருந்து விடுகிறது. ஆமாம் நம் புத்தகத்தில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் எங்கிருந்து வந்தன? இந்த கேள்வியை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கேட்டதாக நினைவில்லை. எனினும் வாழ்க்கை […]