Categories
கருத்து தமிழ்

நினைவுகளை தேடி

இளம் பருவத்தில் பலரும் வரலாற்றை விரும்பி படிப்பது இல்லை. அதுபற்றிய தெளிவான சிந்தனையும் இல்லை. சிறுவர்களாக இருக்கும் போது பல வருடங்ளுக்கு முன்னர் நடந்த சம்பவங்களின் தொகுப்பு, நமக்கு ஆர்வத்தை தூண்டாமல், தூங்க வைக்கின்றன. வாழ்க்கை பாடமாக அமைய வேண்டிய வரலாறு வாழ்கையின் துவக்கத்தில் மட்டும் வந்து போகும் கனவாக இருந்து விடுகிறது. 

ஆமாம் நம் புத்தகத்தில் உள்ள கதைகளும் கட்டுரைகளும் எங்கிருந்து வந்தன? இந்த கேள்வியை நான் சிறுபிள்ளையாக இருந்தபோது கேட்டதாக நினைவில்லை. எனினும் வாழ்க்கை போக்கில் சில கேள்விகள் அத்தியாவசியமாகின்றன. இது ஏன் இப்படி இருக்கிறது என்று யோசிக்கும் பொழுது வரலாறு என்பது முக்கியமாகிறது. 

ஒரு விஷயத்தை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அது எப்படி உருவாகிறது என்ற அதன் வரலாற்றை படித்தல் அவசியமாகிறது. வரலாற்றை தேடுக்கையில் அதை புரிந்துகொண்டவர்களின் விளக்கமான வார்த்தைகளின் மூலம் நாமும் அதை சிறிது சிறிதாக புரிந்துகொள்ளலாம். 

உதாரணத்திற்கு gravitation எனப்படும் ஈர்த்தல் சக்தியை பற்றி யாரோ உங்களுக்கு சொல்வதை விட அதை பற்றி தன் வாழ்க்கை முழுவதும் சிந்தித்த Einstein சொன்னால் நன்றாக புரியும். அதை நாம் புரிந்துகொள்ள ஆசைப்பட்டால் அவரது எழுத்துக்களின் மூலம் அவர் எப்படி இதை பற்றி யோசித்தார் என்று அறிந்துகொள்ள முடியும். 

நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்தது, அதன் மூலம் அவர் கிரேவிடேஷன் ஐ கண்டுகொண்டார் என்பது கட்டுக்கதை. அவர் எழுதிய பிரின்சிபியா மாதேமாட்டிக்கா என்ற லத்தின் மொழி புத்தகம் இன்றும் நமக்கு கிடைக்கிறது. அதை அவ்வளவு எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் இது போன்ற பிரதிகளை நாடி ஆய்வு செய்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள். 


நியூட்டனும் ஐன்ஸ்டீன்ம் தனியாக நின்று கிரேவிடேஷன் ஐ கண்டுபிடித்துவிடவில்லை. இன்று கம்ப்யூட்டர் சிப் களிலும் ஜெனெரேட்டிவ் AI என்று புதிதாக பிறக்கும் டெக்னாலஜிகளுக்கும் ஆரம்பம் என்ன என்று யோசித்து பார்த்தால்; 

கட்டம் என்றால் என்ன? வட்டம் என்றால் என்ன? என்று, நாம் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளாத விஷயங்களுக்கும், கட்டமைப்பு கொடுத்த பிளாட்டோ, யுக்ளிட் போன்ற கிரேக்க சிந்தனையாளர்களின் பங்களிப்பும் இருக்கிறது. 

அவர்களின் எழுத்துக்களை பாதுகாத்தது மட்டுமல்லாது அவற்றின் சிந்தனையை மேம்படுத்தும் நோக்கத்தில் எடுக்க பட்ட முயற்சிகளும் இன்று வெஸ்டர்ன் சிவிலிசஷனின் முதுகெலும்பாக இருக்கிறது. 

இந்த வெஸ்டர்ன் சிவிலிசஷன் இன்று உலகம் முழுவதும் பரவி இன்றைய வாழ்நாளை ஆட்டிப் படைக்க காரணமாக இருப்பது தர்க்கம்,அதாவது logic. ஒரு பொருள் எப்படி வேலை செய்கிறது என்றும், அதன் தன்மையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதையும் பரிசோதனை மூலமாகவும் தர்கத்தின் மூலமாகவும் கட்டமைத்து கொண்டு அதை அப்படியே திருப்பி செய்யும் முறைகளை அவர்கள் கையாள்கிறார்கள். 

தர்க்கமும் தர்க்கத்தின் ஆணி வேரான கணிதமும் இன்றய உலகத்தை இயக்குகின்றன. இன்று நாம் உபயோகப்படுத்தும் பொருட்களில் படிப்படியாக சேர்க்கப்பட்ட தர்க்கம் இருக்கிறது. நாம் என்ன செய்வோம் என்று எதிர்பார்த்து அதற்கு விடையாக வேறொன்றை செய்கிறது. சுவிட்சை போட்டால் fan ஓடுகிறது, phone இல் நாம் சொல்ல விரும்புவோருக்கு மட்டும் மெசேஜ் செல்கிறது. 

ஆங்கிலத்தில் சொல்ல கூடிய எந்த ஒரு problem statement கும் அதை தோராயமாக குறிக்கும் ஒரு mathematical மாடல் செய்ய முடியும். அந்த மாடல் இன் தன்மைகளை மாற்றுவதன் மூலம் நிஜ உலக பிரச்சனைகள் எப்படி மாறுகின்றன என்று ஆராய முடிகிறது. 

இதன் மையப்புள்ளி என்னவென்று பார்த்தால் ஒரு பொருளை அதனுடைய தன்மைகளின் (properties) மூலம் குறிப்பிடுவதால், குறிப்பிட்ட தன்மைகளை மட்டும் நினைவில் கொண்டு ஆராய்ந்தால் போதும். அவற்றை நினைவில் ஏற்றவும் இன்று கம்ப்யூட்டர் என்று பொதுவாக கூறப்படும் இயந்திரங்கள் உள்ளன. 

கம்ப்யூட்டர்கள் தகவலை (information) தர்க்க அடிப்படையில் சேகரித்து தர்க்க அடிப்படையிலான அறிவுறுத்தல்கள் (code) மூலம் நமக்கு திருப்பி கொடுக்கின்றன. அடிப்படையில் கம்ப்யூட்டர்கள் ரிஜிஸ்டர் மெஷின் எனப்படும் பதிவு இயந்திரம். ஒரு ரெஜிஸ்டரில் என்னை பதிவு செய்வது, மற்றும் கூட்டுதல், கழித்தல், என்ற அடிப்படை செயல்திறன் கொண்டிருக்கும். இன்றைய நிலவரத்துக்கு பலசரக்கு கடையில் கச்சிங் கச்சிங் என்று பில் போட்டு, change இவ்வளவு என்று பெட்டியை திறக்கும் இயந்திரம் தன்னுள் இந்த பட்டன் ஐ தட்டினால் இந்த செயல்பாட்டை செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை சேர்த்து வைத்திருக்கிறது. 

இன்றைய கை தாங்கி கம்ப்யூட்டர்கள் கூட பல்லாயிரம் தருக்க அறிவுறுத்தல்களை, அறிவுறுத்தப்பட்ட வரிசையில் செய்கின்றன. சில பிரச்சனைகளை நாம் தர்க்கம் கொண்டு அழகாக தீர்த்து கொள்கிறோம். உங்கள் பிரச்சனைகள் குறியீட்டுக்களின் மூலம் குறிக்கக்கூடியவையாக இருந்தால், இன்று அவற்றை படி படியாக கம்ப்யூட்டர் கோடு மூலம் தீர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக கரண்ட் பில் மாதா மாதம் கட்டவேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் இன்றில்லை. உங்கள் பேங்கில் இருந்து நேரடியாக எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ அது மட்டும் EB கு செல்லுமாறு அமைத்து கொள்ள முடிகிறது. 

குரங்குகள் தம்மை சுற்றியிருக்கும் குறியீடுகளையும் அவற்றின் இடங்களையும் கச்சிதமாக, அவை மறைந்த பின்னும், நினைவில் கொள்ளும் திறன் கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு இது குறைவாகவும் அந்த இடத்தில் மொழி, அதாவது ஞாபக சக்திக்கு பதில் மொழிகளை புரிந்து கொள்ளும் திறமை, இருப்பதாக கருத்தப்படுகிறது. மொழி என்னும் பொழுது நாம் பேசும் மொழி அல்லாது குறியீட்டு மொழியை குறிக்கிறோம். அதாவது ஒரு குறியீட்டில் ஒரு தன்மையை குறித்து, அதை அடுத்தவர்க்கு சொல்லிக்கொடுப்பது. 

நாம் வரலாறு பற்றியல்லவா பேசிக்கொண்டிருந்தோம்? அங்கே போகும் முன் இங்கு சொல்லவந்ததை சுருக்கமாக பதிவு செய்து கொள்ளலாம்.  நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் முதல், அணுகுமுறைகள் வரை, எதுவும் ஒரு நாளில் ஒருவரால் உருவாக்கப்படவில்லை. இவற்றின் வரலாற்றை ஆராய்வதன் மூலம் நாம் எவ்வாறு வளர்ந்தோம், எவ்வாறு சிந்திக்கிறோம் என்பதையும், எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.


பொதுவாக வரலாறு என்னும் போது நாம் அரசியல், மற்றும் அதிகாரத்தின் வரலாற்றையே குறிக்கிறோம். இவற்றின் கூறுகள் பொதுவாக சித்தரிக்கப்பட்டும் கற்பனை கலந்தும் காணப்படுகிறது. இவை கையாளும் பிரச்சனைகள் சமூகம் மற்றும் மனிதம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கின்றன. மனிதன் செயல்திறன் முன்னேற்றம் அடைவது போலவே சமூக கட்டமைப்புகளிலும் முன்னேற்றம் காண முடியுமா? நம் சிந்தனையை தொடரும் முன் கீழ்வரும் வரலாற்று கதையை படிப்போம். 


1577 ஆம் ஆண்டில், பிரான்சிஸ் டிரேக் என்று அழைக்கப்படும் ஒரு ஆங்கிலேய கடலோடி, தென் அமெரிக்காவில் இருந்த ஸ்பானிஷ் ஆக்கிரமிப்புகளை கொள்ளையடிக்க இங்கிலாந்திலிருந்து புறப்பட்டார்.

கப்பல்களைக் கொள்ளையடித்த பிறகு, வேறொரு வழியில் திரும்பும் முயற்சியில் மேற்கு நோக்கி பயணித்த டிரேக் பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களைக் கடந்து உலகை வெற்றிகரமாகச் சுற்றி வந்தார். நாடு திரும்பியபோது, உலகைச் சுற்றி வந்த முதல் ஆங்கிலேயர் என்ற சாதனை அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்று தந்தது.

ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய ஆதிக்கத்திற்கு இங்கிலாந்தின் சவாலாக அமைந்த இந்தப் பயணம், இங்கிலாந்திற்கு ஏராளமான மசாலாப் பொருட்கள் மற்றும் பொக்கிஷங்களை கொண்டு வந்தது.

நாட்டிற்கும் கணிசமான நிதி திரட்டியது. முதலீட்டாளர்கள் 5,000 சதவீத லாபத்தைப் பெற்றனர் (அசல் முதலீட்டை விட 50 மடங்கு). இந்த வெற்றி கிழக்கிந்தியத்(East Indies) தீவுகளை அடையும் முயற்சிகளில் ஆர்வத்தைத் தூண்டியது.

இன்னும் சில வெற்றி தோல்விகளைத் தொடர்ந்து, 1599 ஆம் ஆண்டில், ஒரு சில முக்கிய வணிகர்கள் மற்றும் கடலோடிகள் கிழக்கே பயணிக்கும் ஒரு முயற்சியைப் பற்றி விவாதிக்க கூடினர்.

அவர்கள் 30,133 பவுண்ட் முதலீட்டோடு ராணி எலிசபெத் இன் ஆதரவை நாடினர். ஆரம்ப பின்னடைவுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் முதலீட்டை 68,373 பவுண்டுகளாக உயர்த்தி கப்பல்களை வாங்கினார்கள்.

இந்திய துணைக்கண்டத்தில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு 15 வருட ஏகபோக உரிமையை அளித்து, ராணி அவர்களின் நிறுவனத்திற்கு ஒரு சாசனத்தை வழங்கினார். இது கிழக்கிந்தியாவில் வர்த்தகம் செய்யும் லண்டன் வணிகர்களின் கவர்னர் மற்றும் நிறுவனம் (Governor and Company of London Merchants trading in the East Indies) என்று பெயரிடப்பட்டது.

கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும் நிறுவனம், மசூலிப்பட்டினம் (1611), சூரத் (1612), மெட்ராஸ் (1640), மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளை நிறுவி, இந்தியாவில் ஆங்கில வர்த்தகத்தை விரிவுபடுத்தியது. மற்ற ஐரோப்பிய சக்திகளின் போட்டி இருந்தபோதிலும், கிழக்கிந்திய கம்பெனி முக்கியத்துவம் பெற்றது.

1801 வாக்கில், கிழக்கிந்திய கம்பெனி £15,404,736 (இன்றைய மதிப்பில் £1,617,004,972) சொத்துக்களைக் கொண்டிருந்தது, ஆனால் இந்த நேரத்தில் அவர்களின் முதல்  £5,393,989 ஆக அதிகரித்திருந்தது. 50 மடங்கு அதிகமாக இல்லாவிட்டாலும், அது இன்னும் குறிப்பிடத்தக்க மூன்று மடங்கு லாபம்.


இது போன்ற தரவுகள் நமக்கு சொல்லும் தகவலை விட அவை எழுப்பும் கேள்விகள் பலவிதமானவை. சொல்லப்படுவதை விட, சொல்லப்படாத ஓட்டைகளில் கதைகள் ஒளிந்திருக்கின்றன. உதாரணமாக உலகம் சுற்றி வரும் அளவுக்கு தயாரிக்கப்பட்ட கப்பல் எப்படி இருந்திருக்கும்? இவர்கள் கடல்களை கடக்க என்ன பொருட்களை ஏற்றி சென்றிருப்பார்கள்? எத்தனை பேரின் ஊழியம்? அவர்களில் உணவு எப்படி இருந்திருக்கும்? இவர்களை சந்தித்த கடலோர மக்கள் இவர்களை பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்றெல்லாம் யோசித்து கொண்டே போகலாம். 

நான் படித்த வரலாற்றின் சுருக்கத்தை எனது பார்வையில் கொடுத்திருக்கிறேன். இது கொடுப்பவரின் பார்வையில் படிக்கப்படுகிறது. இங்கே வரலாற்றை யார் எழுதுகிறார்கள் என்பதும் முக்கியமாக படுகிறது. தர்க்கம் இங்கு வேறு விதமாக செயல்படுகிறது.

இந்த கதையில் காலமும் களமும் வேற்று உலகத்தை போல் இருக்கின்றன. ஆனாலும் இதனோடு நம்மை இனைத்துக்கொள்ள முடிகிறது. ஏனென்றால் இதன் கருவாக மனிதன் இருக்கிறான்.  இதில் உள்ளடங்கிய  பிரச்சனைகள் சமூகம் மற்றும் மனிதம் சார்ந்த பிரச்சனைகளாக இருக்கின்றன. இந்த கதையை ஊடுருவும் லட்சியமும் பேராசையும் நமக்கும் பரிச்சியம் தான். பெரும் உயிர் செலவையும் பொருட் செலவையும் கடந்து தான் இது போன்ற லட்சியங்கள் வெற்றி பெறுகின்றன. 

இன்றும் கூட பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் முதலாளிக்கு தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது போன்ற வரலாற்று நிகழ்வுகள் நடந்த காலத்தில் பொது ஜனம் என்ன செய்துகொண்டிருந்திருக்கும்? வழக்கம் போல் வாழ்க்கை தான். காலை சிற்றுண்டி கழித்து விட்டு அடுத்த உணவுக்கான உழைப்பில் ஈடு பட்டிருக்கும். 

டிரேக் கொள்ளையடித்த பணமும் செல்வமும் எத்தனை கால உழைப்பாக இருக்கும் என்ற நினைப்பு நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.  

இன்றும் கூட வேற்று நாட்டு நிறுவங்கள் இந்தியாவில் முதலீடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் பலருக்கு வரலாறு காணாத செல்வத்தை பெற்று தந்திருக்கிறது. 

சில விஷயங்கள் மாற்றம் கண்டும் இருக்கின்றன. உலகம் முழுவதும் பொருள் சேகரித்த இங்கிலாந்து நாட்டு முதல்வர் “buy british” என்று முழங்குகிறார். COVID கால விநியோக சிக்கல்களை தாண்டி உலகமயமாக்கல் சற்றே பின் வாங்கியும் பல இடங்களில் தேசியவாதம் மேலோங்கியும் இருக்கிறது. 


தகவல் யுகத்தில், தகவலும் நமக்கு எளிதாக கிடைக்கிறது, அவற்றை ஆராய்ச்சி செய்யும் கருவிகளும் நம் கைப்பிடியில் இருக்கின்றன.

இந்த தகவல் எந்த நேரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியமல்ல, இவையெல்லாம் சரியா, நேர்மறையான சிந்தனையா, இவை நம் மனப்போக்கை நலமாக வைத்திருக்க உதவுமா என்ற கேள்விகளையெல்லாம் இந்த தகவல் யுகத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஏனென்றால் மனிதன் எதையும் மறப்பதில்லை. ஞாபகம், மறதி என்ற இரு பரிணாமங்கள் கொண்ட திறன் நம் வாழ்வின் ஆதி மூலம். குரங்குகளை போல கச்சிதமாக இல்லாவிட்டாலும் தோராயமாக நினைவில் நின்றும் நம்மை நினைவுகள் படுத்துக்கின்றன. 

இன்று தகவல் தொழிர்னுட்பத்தின் வளர்ச்சியால் நம்மை சமாசாரங்களில் மூழ்கிடித்து விடுகிறார்கள். இவை நம் மூளையின் ஏதோ ஒரு மூலையில் இருந்து நம்மை தொலைத்து எடுக்கிறது. 

இவற்றின் தாக்கத்தில் இருந்து தப்பித்து கொள்ளவும், மனங்களை சுத்தமாக வைத்து நடுசாராக ஆய்வு செய்யவும் நமக்கு வரலாறு தேவை படுகிறது. 

நினைவுகளை தேடி… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *