கீலிங் வளைவு, பூமியின் வளிமண்டலத்தில் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயு (CO2) அளவீட்டை விளக்கும் ஒரு தரவு.
கரியமிலவாயு எப்படி உருவாகிறது?
உலகின் அத்தனை ஜீவராசிகளும் உயிர் வாழ இன்றியமையாத சுவாசம் ஆனது உயிர் வாயுவை உட்கொண்டு கரியமிலவாயுவை வெளிவிடும் முறையில் தான் நிகழ்கிறது.
செடிகளும், கொடிகளும் மரங்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல..
பகல் நேரத்தில் மரங்கள் photosynthesis அதாவது ஒளிச்சேர்க்கையின் வாயிலாக கரியமிலவாயுவை உட்கொண்டு oxygen ஐ அதாவது உயிர்வாயுவை மரங்கள் வெளியேற்றுகிறது. கார்பனை பிரித்து தன் உடலில் சேர்த்துக்கொள்கிறது.
இதனால் தான் மனிதர்களாகிய நாமும், பல விலங்குகளும் உயிர் வாழ மரங்கள் , தாவரங்கள் இன்றியமையாதது என்று சொல்கிறோம்.
ஆனால் அதே மரங்களும் இரவில் ஒளிச்சேர்க்கை செய்வதல்லை. மாறாக சுவாசிக்கின்றன.
அப்படி சுவாசிக்கும் போது அவையும் உயிர்வாயுவை உட்கொண்டு, கரியமிலவாயுவை வெளியேற்றுகின்றன.
இதனால் ஒரு நாள் அளவில் பார்க்கும்போழுது காலையில் சூரியன் வெளிப்பட்ட உடன் வளிமண்டலத்தில் திரளும் CO2 – கரியமிலவாயு அளவு குறைய துவங்குகிறது. மாலை நேரத்தில் மரங்களும், விலங்குகளும் சேர்ந்து சுவாசிக்க CO2 அளவு அதிகரிக்கிறது. இதை வரைபடத்தில் தரவாகப் பார்த்தால் இப்படி இருக்கும்
ஒரு நாளுக்கான தரவு போல, ஒரு வருடம் முழுவதும் CO2 எப்படி வேறுபாடுகிறது என்று பார்க்கும் பொழுது மேலே இருப்பது போலவே ஒரு வளைவு தென் படுகிறது.
இது ஏன் என்று ஆராய்ந்தால் இலையுதிர் காலத்தில் CO2 கூடியும் (ஒளிச்சேர்க்கை நிகழ்வு குறைவு) வசந்த காலத்தில் மரங்கள் வளர்ச்சி பெரும்போது ( ஒளிச்சேர்க்கை நிகழ்வு அதிகம்) கரியமிலவாயு திரளும் அளவு குறைந்தும் காணப்படுக்கிறது.
(equator- துருவங்களின் இரு பக்கம் உள்ள காற்று கலக்க 2-3 வருடம் ஆகிறது)
இப்படியாக நமது பூமியின் வளிமண்டலத்தில் தொடர்ச்சியாக சேர்ந்து திரளும் கரியமிலவாயு ( CO2 ) ன் அளவை நேரத்தோடு ஒப்பிடும் வளைவை கீலிங் வளைவு (keeling curve) என்று குறிப்பிடுகிறார்கள்.
இதை துவங்கி வைத்த விஞ்ஞானி சார்லஸ் டேவிட் கீலிங் என்பவரின் நினைவாகவே இது கீலிங் வளைவு என்று இன்றளவும் கூறப்படுகிறது.
இந்த வளைவு 1958 ல் துவங்கி இன்றளவிலும் ஆண்டுதோறும் திரளும் கரியமிலவாயுவின் அளவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.
இந்த வரைவுக்கான தரவுகள் ஹவாய் தீவிலுள்ள மவுனா லோ என்ற எரிமலைப்பகுதியில் திரட்டப்படுகிறது.
ஆய்வுக்காக மவுனா லோ தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், மக்கள் அடர்த்தியற்ற, பசுமை குறைவான பகுதி என்பதால் தான். பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் தீவில் இவவிடம் இருப்பதால் இதனை வடக்கு அரைக்கோளத்தில் காற்றில் இருக்கும் CO2 வின் சராசரியாக கொள்ளலாம்.
1950லில் கீலிங் இதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்து அளவெடுக்கத் துவங்கியது முதல் இன்று வரை இந்த ஆய்வு தொடர்கிறது.
சரி வருடம்தோறும் எடுத்த இந்த அளவீடு எப்படி இருக்கிறது பார்ப்போம்.
1958 ல் ஆரம்பித்த இந்த வளைவு இன்று வரை எந்த இடத்திலும் திரும்பாமல் நேர்கோட்டில் உயர்கிறது.
அதாவது கரியமிலவாயு வெளிப்படுதல் எங்கேயும் குறைந்தபாடில்லை.. வருடந்தோறும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1958 ல் 313 ppm ( மில்லியனில் ஒரு பகுதி) ஆக இருந்து CO2 2018 ல் 406 ppm ஆக உயர்ந்திருக்கிறது..
ஆண்டுக்கு தோராயமாக 2.46 ± 0.26 அளவீட்டில் உயர்கிறது.
தொடர்ச்சியான அதிகரிக்கப்பட்ட கரியமிலவாயு வெளிப்பாட்டினை இது உணர்த்துகிறது.
இது பசுமை இல்ல வாயு என்பதால் இதன் உயர்வு Global warming எனப்படும் உலக வெப்பமயமாதலை அதிகப்படுத்த உந்துதலாகிறது.
1958கும் முன்பு உள்ள அளவீடு பணியாக உறைந்திருக்கும் தண்ணீரில் உள்ள கார்பனின் அளவை கண்டுபிடிப்பது மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக 275 என்ற அளவில் இருந்த கரியமிலவாயு வெளிப்பாட்டு அளவு, 19 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தொழில்மயமாதல் (industrialization) என்பதன் பக்கவிளைவாகக் காணலாம்.
இந்த கட்டுரையில் பல அறிவியல் ரீதியான விளக்கங்களும் , வரலாற்று பின்னனிகளும் மிக விரிவாக சொல்லப்படாமல், கரியமிலவாயு வெளிப்பாட்டு அளவின் தொடர்ச்சியான வேகமான உயர்வு பற்றியும், அதன் விளைவு உலக வெப்பமயமாதல் என்பதையும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கிறோம்.
உலகம் நமக்கானது மட்டுமல்ல. நமது வருங்கால சந்ததிக்கும் நல்ல ஆரோக்கியமான உலகத்தை பரிசாகத்தர வேண்டும்
மரம் வளர்த்தலில் துவங்கி, பசுமை இல்ல வாயு கெளிப்படுத்தலைக் கட்டுப்படுத்த உலகத்தில் பல நாடுகளும் சேர்ந்து எடுத்துள்ள பல வகையான திட்டங்களை சிறப்பாக செய்ய ஒவ்வொரு குடிமக்களும் கைகொடுக்க வேண்டும்.
அக்கறையுடன்
நினைவுகள் வலைப்பக்கம்.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.