1906 ஆம் ஆண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய கப்பல் கம்பெனி.
தூத்துக்குடி துறைமுகத்திலும் , இந்தியப்பெருங்கடலிலும் கொடிகட்டிப்பறந்த ப்ரிட்டிஷ் ஆதிக்கத்தை ஒடுக்க, எடுக்கப்பட்ட முடிவு தான் இந்த SSNC.
ஆனால் இது காகிதத்தில் கப்பல் செய்யும் சமாச்சாரம் அல்ல.
அன்றைய காலகட்டத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பு. 2019 ஆம் ஆண்டில் 2000 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பீடு.
இதை 40 பேரின் பங்களிப்புடன் செய்து காண்பித்தார் வ.உ.சி.
இதில் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பாண்டித்துரைத்தேவர் என்பவருடையது.
தனது ஜமீன் பகுதியிலிருந்த ஒரு கிராமத்தை விற்று 2 லட்ச ரூபாய் பணத்தை இதற்கு பங்காக அளித்தார்.
இந்த கம்பெனிக்கு முதல் கப்பல் S.S காலியோ, பிரெஞ்சு அரசாங்கத்திடமிருந்து வாங்கப்பட்டது.
இந்த கப்பல் பாலகங்காதர் திலக் மற்றும் அரபிந்தோ கோஷ் அவர்களின் உதவியுடன் வாங்கப்பட்டு 1907 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது.
இதன் எழுச்சியைத்தடுக்க, பிரிட்டிஸ் கம்பெனி பல நல்ல இலவசத்திட்டங்களையும் கட்டணக்குறைப்புகளையும் செய்த போதிலும் நாட்டுப்பற்று காரணமாக வியாபாரிகளும், மக்களும் SSNC க்கு ஏகோபித்த ஆதரவு அளித்தனர்.
இன்னொரு கப்பலான S.S லாவோவும் கம்பெனியில் இணையவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கெட்ட எண்ணம் நேரடியாக வெளிப்பட்டது.
கப்பலுக்கு துறைமுகத்தில் இடம் ஒதுக்குவது துவங்கி, பயணிகளின் சரக்குகளின் ஏற்ற இறக்க விதிமுறைகள், மற்றும் நடைமுறைகளை தாமதப்படுத்தி, இந்த சுதேசி கம்பெனியை எப்படியாவது திவாலாக்கி விட நினைத்தார்கள்.
ஆனாலும் தொடர்ந்து ஈடு கொடுத்தது SSNC.
பிபின் சந்திரபால் சிறையில் இருந்து வெளிவந்த மகிழ்ச்சியை சுயராஜ்ய தினமாக கொண்டாடிய குற்றத்துக்காக 1908 ஆம் ஆண்டு வ.உ.சி கைது செய்யப்பட்டு 40 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
இவரின் கைதுக்கு பிறகு தலைவன் இல்லாத படை போல் ஆள் இல்லாமல் போன சுதேசி கம்பெனி நீர்த்துப்போனது.
கப்பல்கள் விற்கும்படி ஆனது.
இந்தியாவின் முதல் கப்பல் கம்பெனி ப்ரிட்டிஷ் சூழ்ச்சிக்கு இறையானது.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.