Categories
சினிமா தமிழ் வரலாறு

Is Paris burning?

இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.

இந்த வார்த்தைகளுக்கு ஒரு செவி வழிக்கதை உண்டு.
அதில்லாமல், இந்தத் தலைப்பில் ஒரு புத்தகமும், ஒரு சினிமாவும் வந்திருக்கிறது. அதுவும் ப்ரெஞ்சில் வெளியான மிகப்பிரபலமான திரைப்படங்களுள் ஒன்று.

முதலில் அந்த செவி வழிக்கதையை ரசிக்கலாம்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் தலைமையிலான அச்சுப்படைகள் பிரான்ஸ் நாட்டைக்கைப்பற்றியதும் ஹிட்லர் பாரீஸ்க்கு ஒரு மிலிட்டரி ஜெனரலை நியமித்து, அவருக்கு பாரீஸை அழிக்குமாறு கட்டளையிடுகிறார்.

முதன்முறை பாரீஸ்க்கு வந்த அந்த ஜெனரல் பாரீஸின் அழகில் மயங்கி, இப்படியான நகரத்தை அழிப்பதை விட இதில் நாம் ஆட்சி செய்து அனுபவிக்கலாம் என்ற தனது சிந்தனையை எப்படியாவது ஹிட்லரிடம் தெரிவிக்க ஆசைப்படுகிறார்

ஹிட்லரைப்பற்றி தான் உலகுக்கே தெரியுமே, அவர் கட்டளையிட்டால் அதுதான் கடைசி என்று. ஆனாலும் பாரீஸின் அழகு, அந்த ஜெனரலை ஹிட்லரிடம் ஒரு வார்த்தைப்பேசிப்பார்க்கலாம் என்ற மனதைரியத்தை அளித்தது.

ஜெனரல் தைரியத்தை வழவழைத்துக்கொண்டு ஹிட்லருக்கு கால் செய்கிறார்.

ஹிட்லரிடம் பாரீஸில் இருந்து போன் என்று சொல்லப்பட்டு போன் ரிசீவர் தரப்படுகிறது.

ஹிட்லர், ஹலோ கூட சொல்லவில்லை.
ரிசீவரை வாங்கியதும்
“Is Paris Burning?” என்றுதான் கேட்டாராம்!

இதுதான் அந்த செவிவழிக்கதை.

ஹிட்லரிடம் நமது ஆசையெல்லாம் சொல்ல இயலாது என்றறிந்த ஜெனரல் வந்த வேலையைப்பார்ப்போம் என்று முடிவு செய்கிறார்

இப்போது புத்தக/ சினிமா ஆய்வுக்கு வரலாம்.
Is Paris Burning என்ற புத்தகம், 1965 ஆம் ஆண்டு Larry Collins மற்றும் Dominique Lappierre என்ற இருவரால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.

அந்தப்புத்தகத்திலிரிந்த அதே சாராம்சம், அந்த புத்தகத்தின் தலைப்பிலேயே படமாக அடுத்த ஆண்டே வெளியானது..
மேற்கூறியது போல, அந்தப்புத்தகமும் மிகப் பிரபலம், அந்தப்படமும் பிரபலம்.

இந்தப்புத்தகம்/ படம் இரண்டாம் உலகப்போரின் போது, தனது மீட்சிக்காக பிரான்ஸ் நடத்திய புரட்சியைப் பற்றியது.

ஹிட்லரின் மீதான கொலை முயற்சி தோல்விக்கு சிறிது காலம் கழித்து , ஹிட்லர், சோல்டிட்ஸ் என்பவரை, ஆக்கிரமிக்கப்பட்ட பாரிஸின் ஆளுநராக நியமிக்கிறார். ஆளுநர் என்பவர் அமைதியாக ஆள்வதற்காக நியமிக்கப்பட்டவரல்லர்.

பாரிஸை நேசநாட்டுப்படைகள் கைப்பற்றாமல் தடுக்கவும், பாரிஸை முற்றிலும் அழிக்கவும் தான் இந்த நியமனம்.

ப்ரெஞ்ச் தடுப்புப் படை, நேச நாடுகள், பாரிஸை கையாள முயற்சி செய்யவில்லை, மாறாக பாரிஸ் வழியே ஜெர்மனியை அடைய முயற்சி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றனர்.

உள்நாட்டில் உருவான கிளர்ச்சிப்படை நேசநாடுகளிடம் “ஒருவேளை பாரிஸை நாங்கள் இழந்தால், நீங்கள் எங்களின் கடும் கோபத்திற்கு ஆளாவீர்கள்” என்று சொல்லி, உதவி கோரியதும், ஹிட்லரின் மிலிட்டரி அணியை துவம்சம் செய்யும் விதமாக டாங்கர் உட்பட படைகளும் , பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கா உதவியுடன், பாரிஸுக்கு கிடைக்கிறது.

ஹிட்லரின் படைகள் நேச நாடுகளின் டாங்கர்கள் மற்றும் படைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரணடையும் போது, சோலிட்ஸ் யாரிடமோ தொலைபேசியில் பேசுவது போலவும், அந்தப்புறத்தில் இருந்த குரல் திரும்ப திரும்ப

“Is Paris Burning?” என்று ஆதங்கத்துடன் கேட்பது போலவும்,
பாரிஸை அழிக்க முயன்ற முயற்சி தோற்று பாரிஸின் மக்கள் மகிழ்ச்சியாக அந்த நாட்டின் தேசிய கீதம் இசைக்குமாறு காட்சிகள் புத்தகத்தை/ படத்தை நிறைவுறச்செய்கின்றன.

ஒருவேளை நாசிப்படைகள் நாசம் செய்திருந்தால் இன்று அழகான பாரிஸ் நகரம் என்ற ஒன்று இருந்திருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *