Categories
சினிமா தமிழ்

இந்தியன் 2 : ஒரு பார்வை

திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தின் கதையும் ஓட்டமும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. படம் பார்க்காதவர்கள் எச்சரிக்கையாக அணுக்கலாம். 

சென்ற வாரம் நமது பக்கத்தில் இந்தியன் படத்தின் எதிர்பார்ப்புகளை பற்றி அருண் பாரதி அவர்கள் எழுதியிருந்தார். பலத்த எதிர்பார்புகளுடன் வந்த திரைப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பை பெற வில்லை.

சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றுவதை பார்த்தல் படம் ரொம்ப மொக்கையாக இருக்கலாம் என்று உத்தேசித்து நானும் விட்டுவிட்டேன். தெரிந்தோ தெரியாமலோ இந்த படத்தின் பாடல்கள் என்னோடு ஒட்டிக்கொண்டன. செவ்வாய் கிழமை மலிவான டிக்கெட் கிடைக்கவும் ஒரு வழி பார்த்து நாமே தீர்மானித்து விடலாம் என முடிவு செய்துவிட்டேன். 

ஒரு படத்தின் பாடல்களை கொண்டு அந்த படத்தை பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம். உதாரணமாக வெளியாகவிருக்கும் ராயன் படத்தின் வா ராயா பாடலின் வரிகள் “இந்த பறந்து கெடக்கும் பூமி உனக்குந்தந்ததைய்யா, இங்கு இருக்கும் அத்தனை சாமியும் உனக்கும் சொந்தமைய்யா” களத்தையும் கதைமாந்தார்களையும் பற்றி நமக்கு தகவல் சொல்கிறது. 

இப்படி உருக்கமான இசையை கொடுக்ககூடிய ரஹ்மான் ஐ விட்டுட்டு ஷங்கர் அனிருத்தின் இறைச்சலுக்கு விலை போய்விட்டாரே என்று ரசிகர்களுக்கு ஏற்கனவே ஆதங்கம். Come Back Indian இன் youtube கமெண்ட் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.  

இதற்கான விடையை சினிமாவிலேயே சொல்லியிருக்கிறார் இயக்குனர். இந்தியன் தாத்தா facebook லைவ் இல் பேசும்போது 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் phone ஐ அனைத்து விடுங்கள் இந்த மெசேஜ் இளைஞர்களுக்கு மட்டும் என்று சொல்கிறார். தனக்கு பிடித்த இசையமைப்பாளர்களையே மாற்றி கொள்ளாத ஜனம் ஊறிப்போயிருக்கும் கெட்ட பழக்கங்களை எப்படி மாற்றி கொள்ளும்? 

இதில் 40 வயது என்பது metaphor (உருவகம்). இன்றைய தலைமுறை 20 வருடங்களில் வரும் புதிய இசை நன்றாக இல்லயென எண்ணலாம். 

தாத்தா வாராரே 
மூஞ்சி புக்குல வாராரே 
ஏழு மணிக்கு வாராரே 
7 1/2 தர போராரே 

kadharalz பாடல் வரிகள்

ஷங்கர் மீது பல குற்றச்சாட்டுக்களும் கேலிகளும் வைக்கப்படுகின்றன. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கும் முன் இவைகளையும் கொஞ்சம் பார்ப்போம்.  முதலாவதாக corruption பற்றிய படம் Red Giant Movies வெளியிடுவது பலருக்கும் எரிச்சல் அளிக்கிறது. 

புலவர்களை என்றைக்குமே அரசர்களும் அதிபர்களுமே ஆதரித்து இருக்கிறார்கள். அவர்களிடம் இவ்வளவு பணம் வாங்கி படம் எடுப்பது இயக்குனரின் தவறா திறமையா? நல்லவனிடம் மட்டும் பணம் வாங்கி இப்படி ஒரு சினிமா சாத்தியமா?

இரண்டாவதாக மிக முக்கியமான குற்றச்சாடகவும் கேலியாகவும் இருப்பது சுஜாதா இல்லாமல் ஷங்கர் இல்லை. அவர் எழுதி கொடுத்தத்தை மட்டுமே இவர் படம் எடுத்து பிழைத்துகொண்டிருந்தார். இந்த படத்தில் கதை நல்லா இல்லை, இவருக்கு எழுத தெரியவில்லை என்கிறார்கள். குறை சொல்பவர்களுக்கு சுஜாதா வின் இறப்பிற்கு பிறகு பல எழுத்தாளர்களுடன் பணியாற்றியிருக்கிறார் என்ற விவரம் தெரியுமோ தெரியாதோ. இந்த படத்திற்கும் ஜெயமோகன் உள்பட சிறப்பான எழுத்தாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். 

சரி அப்படி என்ன கதை? 

நாட்டில் நடக்கும் கேடுகளை சிலர் youtube கிற்காக காட்சி செய்கின்றனர். கேடுகள் முத்திப்போகவே அவற்றில் இருந்து சமுதாயத்தை காக்க இந்தியன் தாத்தா வை அழைக்கின்றனர். 

Vigilante ஒரு கண்டிஷன்னுடன் வருகிறார். Zero Tolerance. நாட்டை சுத்தம் செய்ய முதலில் உங்கள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையிடுகிறார். இதை பின்பற்றும் பலரும் தங்கள் வீடுகளில் உள்ள விதிமீரால்களை வெளிக்கொனர, அவற்றினால் ஆகும் விளைவுகளால் தடுமாறுகின்றனர். 

இந்தியன் தாத்தா அளவுக்கு மீறி சொத்து சேர்ப்பவர்களை குறி வைக்கிறார். அதனால் உடைந்து போகும் குடும்பங்கள் வெறித்து எழுந்து இந்தியனை எதிர்க்கவே, நாடே அவருக்கு எதிராக திரும்பி விடுகிறது. இந்த தருணத்தில் இடைவேளையை போல படம் முடிந்துவிடுகிறது. மீதி அடுத்த பகுதியில். 

கல்வி கடனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் இளைஞன், ஆசிரியர் வேலைக்கு லஞ்சம் கொடுக்கும் போது மாட்டிக்கொண்டதால் மாடியில் இருந்து குதிக்கும் பெண்மணி, 2 கோடி டொனேஷன் கொடுத்து டாக்டர் ஆணவன் செய்யும் தப்பான சர்ஜரியால் உயிரிழக்கும் அம்மா என்ற கதைகளை, அவற்றை காரணமாக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பணத்தில் கொளிக்கும் தொழிலதிபர்களின் கதைகளோடு இணைக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நூல்கள் அவிழ்கப்பிடுகின்றன. 

இன்னொரு பக்கத்தில் இந்த தீமைகளின் பெரும் உருவமான க்ரானைட் கொள்ளைக்காரன், கல்விதந்தை போல அளவுக்கு மீறி பெரும் சொத்து சேர்த்த முதலைகளை இந்தியன் தாத்தா நூதமான முறையில் அவமான படுத்தி கொலை செய்கிறார். 

சரி படத்தில் என்ன நல்லா இருக்கு? 

நாட்டின் தீமைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஆவணப்படுத்தும் காட்சிகள் அருமை. Art direction, casting துவங்கி காட்சியமைப்பு, வசனம் எல்லாம் நன்றாக இருக்கிறது. 

“அவன்கிட்ட(health secretary) என்ன இருக்குனு ரெயிடு” என்று கேட்கும், சதுப்பு நிலங்களுக்கு பட்டா எழுதும் பெண்மணி, கோடிகளில் மதிப்புள்ள ஆவணங்களை nighty யில் கையெழுத்து போடுகிறார். இவர் மகளுக்காக சொத்து சேர்ப்பதாக சொல்கிறார். 

என்ன நல்லா இல்லை? 

Vigilante யை தொடர ஒரு போலீஸ் அதிகாரி வேண்டுமல்லவா, அந்த காட்சிகள் நம்பும்படியாக இல்லை. Prosthetic மேக் அப் உள் இருக்கும் கமலின் இயல்பான நடிப்பை காண முடியவில்லை. 

இந்தியன் தாத்தா செய்யும் நூதன கொலைகளும் அவர் பேசும் வசனமும் ஓவர் தி டாப் ஆக இருப்பது போல தோன்றலாம். இது போன்ற சினிமா பார்த்து ரசிக்க ஒரு வித suspension of disbelief தேவை. 

மற்றும் முன் சொல்லியிருக்கும் சோக கதைகளில் மூழ்கியிருக்காமல் வேகமாக நாகர்ந்து விடும் திரைக்கதை அவற்றின் அழுத்தத்தை பதிவு செய்யாமல் போகலாம். Corruption போன்ற டாபிக் ஐ சினிமா வாக எடுக்க வேண்டும், அந்த திரைப்படம் பொதுவாக மகிழ்வூடுவதாகவும் இருக்க வேண்டும் என்பதால் வரும் குறைகளை பெரிது படுத்தாமல் போனால் துள்ளலான இசையுடன், கதைகளை ஸ்வாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் இயக்குனர். 

நிகழ்வுக்கு அருகில் இருக்கும் கதையோட்டத்துடன் கற்பனையாக நடக்கும் “இந்தியன் தாத்தா” என்ற vigilante ஜஸ்டிஸ் கதையோட்டத்தை பின்னியிருக்கிறார்கள். இவை இன்னும் முழுமையாக சந்திக்கவில்ல. 

இந்தியன் தாத்தாவை எப்படி காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்? 

இந்தியனை துப்புரவு தொழிலாளியாகவும், ரிப்பேர் செய்யும் என்ஜினீயர், டெக்ணிசியன் போன்ற வேடங்களிலும், குஜராத்தி இந்து, சர்தார் போன்ற உருவங்களிலும் உருவமைத்திருக்கிறார்கள்.

தங்கத்தில் மிதக்கும் குஜராத்தி திருமணம், விண்வெளி பயணம் செய்ய தயாராகி கொண்டிருக்கும் பணக்காரன் போன்ற காட்சிகள் உண்மைக்கு எவ்வளவு அருகில் என்பது அம்பானி கல்யாண காட்சிகளை பார்த்தோருக்கு சொல்லவேண்டியதில்லை. இதை 5 வருடம் முன்னால் கற்பனை செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். 

இந்தியன் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளும் போதும், ரயில் ஓட்டுநரை மிரட்டும் போதிலும் இவர் செய்தால் சரியா என்று நகைப்பூட்டவைப்பதும் குறையே . இந்த கதையோட்டம் முடிவு பெறாதத்தால் இதற்கு ஏதேனும் காரணம் சொல்கிறார்களா என்று அடுத்த பகுதியில் காணலாம். 

முடிவாக

இந்த நாட்டில் வாழும் மக்களை, இந்தியர் என்று கூறப்படும் அனைவரையும் ஒன்று படுத்தி நாம் கற்பனையிலாவது ஒருமையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் பாராட்டுக்குறியது. 

உன் தங்க காசெல்லாம் வெறும் வாழ்வை வெல்லுமடா
உல்லாசம் ஒன்றே தான் உன் சாவை வெல்லுமடா, மூடா 
வாழ்வென்பது வானின் அளவல்ல
கோப்பை அளவு தான் சிந்ததே நீ அருந்து

என்ற பாடல் வரிகளை போல் என் உல்லாசம் எனக்கு முக்கியம் என்ற மற்றவன் எக்கேடு கெட்டு போனால் என்ன என்று சுயநலத்துடன் சுற்றிகொண்டிருபவர்களுக்கு இந்த படம் ஒரு குட்டு. 

ஷங்கரின் படங்கள் rhetoric பேசும் திரைப்படங்களாக தான் என்றுமே இருந்திருகின்றன. “5 காசு திருடினால் தவறா? 50 கோடி பேர் 5 காசு திருடினால் தவறா?” என்று சமூகத்தை கேள்வி கேட்கும் முறைமை இங்கேயும் காணலாம். “அம்மா, நீ வைத்திரிக்கும் 100 பட்டு புடவைகளில் 80 உன்னுடையதல்ல”. சமூகத்தில் உள்ள தீய பழக்கங்களை வெவ்வேறு காட்சிகளின் மூலம் அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். இந்த காட்சிகள் வரிசை படுத்தப்படாமல் தோராயமாக வந்து போவது பலரையும் நிலைக்குலைய வைத்து விடுகிறது. பின்னோக்கி பார்த்தே அறிவை வளர்த்துக்கொண்ட விமர்சகர்களுக்கு தங்கள் முன்னிருக்கும் புதிய சகாப்தம் தெரிவதில்லை.