சமீபத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்த KGF என்ற படத்தைப்பற்றி அறியாதோர் சிலரே.
அந்தப்படத்தின் கதையம்சம் என்பது, ஒரு லாபகரமான தங்கச்சுரங்கத்தைக்கட்டி ஆளும் பலசாலியை வீழ்த்தி அந்த இடத்தைத் தட்டிப்பறிக்க நினைக்கும் சில ஆட்கள், அந்த பலசாலியை வீழ்த்த ஆயுதமாக ஒருவரை நிர்ணயிக்கின்றனர்.
இறுதியில் அந்த பலசாலி வீழ்த்தப்பட்டார்
ஆனால் அந்த ஆயுதமாக வந்த ஆள் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிப்படைக்கிறார்.
இதே கதை.
ஒரு மிகப்பெரிய நாட்டிலும் நிகழ்ந்திருக்கிறது.
வேறு எதுவுமில்லை, பாரதம், இந்தியா, என்றெல்லாம் சொல்லப்படும் நமது நாடு தான்.
வளம் மிகுந்த இந்த நாட்டினை முகலாய மன்னர்களும், நவாப்களும் ஆட்சி செய்வதைப்பொறுக்காத சிலர், ஆங்கிலேய படைகளுக்கு பணம் கொடுத்து அந்த நவாப் மன்னரை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தனர்.
நவாப் ஐ ஒழிக்க ஆயுதமான ஆங்கிலேய படை இறுதியில் KGF பட நாயகன் யஷ் போல இந்தியாவை படிப்படியாக ஆக்கிரமித்தது..
கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்படும், ஆங்கிலேய வியாபார கம்பெனி இந்தியாவிற்குள் நுழைய மிக முக்கியமான காரணம் இந்த ப்ளாசிப் போர் தான் (Battle of Plassey).
வங்காளத்தை ஆட்சி புரிந்த கொண்டிருந்தவர் நவாப் சிராஜ்-உத்-தௌலா. அதைப்பொறுக்காத ஜகட் ஷேத் என்ற பணக்கார வியாபார குடும்பத்தினர், ராபர்ட் கிளைவ் என்ற ஆங்கிலேய படைத்தளபதியிடம் அப்போதே 10 லட்சம் பவுண்டு பணம் கொடுத்து நவாப் ஐ ஒழித்துக்கட்ட கோரிக்கை வைத்தனர்.
அதுமட்டும் இல்லாமல் கிழக்கிந்திய கம்பெனிக்கு 10 லட்சம் பவுண்டுகள். 2023 ஆம் ஆண்டு இந்தப்பணத்தின் மதிப்பு 46 லட்சம் பவுண்டுகள். அதாவது இந்திய ரூபாயில் கணக்கிட்டால் கிட்டதட்ட 50 கோடி ரூபாய்.
அவ்வளவு பணம் கொடுக்கப்பட்ட காரணம், நம்பிக்கை. ராபர்ட் கிளைவ் தலைமையிலான படை நவாப் ஐ கட்டாயம் ஒழித்துக்கட்டிவிடும் என்ற நம்பிக்கை தான்.
நம்பிக்கை பொய்யாகவில்லை.
23 ஜூன் 1757 ஆம் ஆண்டு பழசி ( ஹூக்ளி ஆற்றுப்படுகை), கல்கத்தாவிலிருந்து 150 கிமீ தொலவைவும், முர்சிதாபாத் க்கு தெற்குப்புறமாகவும் அமைந்த அந்த இடத்தில் ஆங்கிலேய படை வென்றது. நவாப் ன் அசைக்க முடியாத படைத்தளபதியான மிர் ஜாபர் வீழ்த்தப்பட்டதே இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ராபர்ட் கிளைவ் ன் புத்திசாலித்தனம். மிர்ஜாபரை எளிதாக வீழ்த்த முடியாது என்பதை நன்கு அறிந்த ராபர்ட் கிளைவ் அவரை விலைக்கு வாங்கி அவரை வென்று விட்டார். இதில் தோற்கடிக்கப்பட்டது நவாப் மட்டுமல்ல. நவாப் இடம் நட்பாகி ஆங்கிலேய படைகளை வீழ்த்தி விட்டால், நமது கொடியை வங்காளத்தில் நாட்டி விடலாம் என்று நினைத்த பிரெஞ்சு படையும் தான்.
இவ்வளவு பெரிய வெற்றியை பணத்தால், படையால் மட்டுமே சாதிக்க முடியுமா?
வென்றால் வங்காளத்தின் கவர்னர் நீதான் என மிர் ஜாபரின் தலையில் ராபர்ட் கிளைவ் திணித்த பதவி ஆசையும் தான்.
1757 ல் கிளைவ் சிராஜ் உத்தவ்லா என்ற நவாப் ஐ வீழ்த்தி கல்கத்தாவைக் கைப்பற்றினார். ஆனால் அது அவ்வளவு எளிதாக நிலைக்குமா?
நவாப் மீண்டும், கல்கத்தாவில் சிறை வைக்கப்பட்டிருந்த போர் கைதிகளைத் திரட்டி சண்டையிட்டார்.
ஆனால் இதைப் பொறுக்காத ஆங்கிலேயர் மெட்ராஸில் இருந்த கிளைவ் ஐ கல்கத்தாவிற்கு அனுப்பி மீண்டும் கல்கத்தாவை கைப்பற்றச் செய்தனர்.
இதோடு இவர்களை விடக்கூடாது, இருந்த தடம் தெரியாமல் அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த கிளைவ் அடுத்து சந்தாநகரில் இருந்த பிரெஞ்சு கோட்டையை பிடிக்க முன்னெடுத்தார்.
இது இந்தப்போரை 7 ஆண்டுப் போராக மாற்றியது. 1757 ல் துவங்கிய யுத்தம் 1763 வரை நிகழ்ந்தது.
வங்காளத்தில் ஆங்கிலேயர்கள் முழுதாக கால் பதிக்க 7 ஆண்டுகள் ஆனது.
நினைவுகள் வலைதளத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து வாசிக்கவும், ஆசிரியரின் குறிப்பு.